திண்டுக்கல் : மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்க பட்டுள்ளது.
அரசு பள்ளியில் பயின்று, மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ .1000 வழங்கும் புதுமை பெண் திட்டத்திற்கு மாணவிகள் https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையத்தில் கல்வி நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆதார், EMIS எண், மாற்று சான்றிதழ் விபரங்களுடன் நவம்பர் 30 வரை பதியலாம்.
விபரங்களுக்கு 91500 56809, 91500 56805, 91500 56801, 92500 56810ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.