திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தென்பழஞ்சியைச் சேர்ந்தவர் விவசாயி பூமிநாதன் 45. இவரது மனைவி தங்கம்மாள் 38, மகன் சந்தோஷ் குமார் 16, மகள் சங்கரி ,15. ஓராண்டுக்கு முன் உடல்நலம் பாதிப்பால் சந்தோஷ்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனம் உடைந்த தங்கம்மாள் சில நாட்களுக்கு முன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். விரக்தியில் இருந்த பூமிநாதன் நேற்று முன் தினம் இரவு தோட்டத்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தடுத்து குடும்பமே தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகள் சங்கிரியின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.