சபரிமலையில் ஆறு நாட்களில் 2.62 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | |
Advertisement
சபரிமலை :''நடை திறந்த ஆறு நாட்களில், சபரிமலையில் 2.62 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்,'' என கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் சுமுகமான சூழலில், எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு, கார்த்திகை 1ம் தேதி 47 ஆயிரத்து 947
சபரிமலை, ஆறு நாட்கள் , 2.62 லட்சம் பக்தர்கள்

சபரிமலை :''நடை திறந்த ஆறு நாட்களில், சபரிமலையில் 2.62 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்,'' என கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் சுமுகமான சூழலில், எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


latest tamil news


இங்கு, கார்த்திகை 1ம் தேதி 47 ஆயிரத்து 947 பேர் தரிசனம் செய்தனர். கடந்த ஆறு நாட்களில், 2.62 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இனி வரும் நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரிசன நேரத்தை அதிகரித்ததால், பக்தர்களின் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைந்துள்ளது.


கேரள அரசு போக்குவரத்துக்கழகம், நிலக்கல் - பம்பை இடையே 6,693 பஸ் சர்வீஸ்களை இயக்கிஉள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் 9,142 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். பக்தர்களின் புகார்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X