''மார்க்கெட் இல்லாத நடிகையை கட்சியில சேர்க்க பேச்சு நடத்தியிருக்காங்க...'' என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''எந்தக் கட்சியில, யாரை சேர்க்கப் போறாவளாம்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''அந்த தமிழ் நடிகை, 20 வருஷத்துக்கும் மேலா நடிச்சிட்டு இருக்காங்க... வயசு கிட்டத்தட்ட 40 ஆகப் போகுது... சில வருஷமா மார்க்கெட், 'டவுண்' ஆயிடுச்சுங்க...
''சமீபத்துல வந்த மன்னர் படத்துல, முக்கிய பாத்திரத்துல நடிச்சிருக்காங்க... அதை பார்த்துட்டு, நிறைய பட வாய்ப்பு வரும்னு எதிர்பார்த்தாங்க... ஆனா, 'ஹீரோயினா தான் நடிப்பேன்'னு அடம் பிடிக்கிறதால, பெரிய அளவுல வாய்ப்புகள் வரலைங்க...
![]()
|
''இதுக்கு நடுவுல, காங்கிரஸ்ல இருந்த நடிகையர் நக்மா, குஷ்பு எல்லாம் வெளியில போயிட்டாங்களே... அதனால, இப்ப மாநில வாரியா முக்கிய நடிகையருக்கு வலை வீசுறாங்க...
''அந்த வகையில, இந்த நடிகைக்கும் துாது விட்டிருக்காங்க... ஆனா, தனக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி தந்தா, லோக்சபா தேர்தல்ல தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவுல பிரசார பீரங்கியா வலம் வர்றேன்னு நிபந்தனை விதிச்சிருக்காங்களாம்...'' என்றார், அந்தோணிசாமி.