மாணவியரிடம் பாலியல் அத்துமீறல் பள்ளி தாளாளர் மீது வழக்கு

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை: சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளி மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தாளாளர் மீது கல்வி நிலையத்தில் தொந்தரவு கொடுத்தல் 'போக்சோ' உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்
School Student, School corespondent, POCSO,  திருநின்றவூர், தனியார் பள்ளி, பள்ளி மாணவி, பள்ளி தாளாளர்,  போக்சோ, Chennai, Tirunindravur, Private School, சென்னை,thiruninravur schools


சென்னை: சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளி மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தாளாளர் மீது கல்வி நிலையத்தில் தொந்தரவு கொடுத்தல் 'போக்சோ' உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தாளாளர் வினோத் 38.


latest tamil news


இவர் 'கவுன்சிலிங்' என்ற பெயரில் பிளஸ் 2 மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவர்கள் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சென்னை -- திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதட்டமான சூழல் ஏற்பட்டது.


latest tamil news


மாலை 3:00 மணியளவில் வினோத் மீது 'போக்சோ' சட்டம் கல்வி நிலையத்தில் தொந்தரவு கொடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


latest tamil news


இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது வினோத் கோவாவில் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (36)

Swamy - pondicherry,சவுதி அரேபியா
24-நவ-202215:33:41 IST Report Abuse
Swamy கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்து போனதற்கே நம்ம தமிழ் நாடு காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்க துப்பு இலை, இதற்க்கு என்னசெய்வார்கள் நம்ம காவல் துறை .
Rate this:
Cancel
baala - coimbatore,இந்தியா
24-நவ-202214:15:46 IST Report Abuse
baala அதெல்லாம் சரி, இவ்வளவு கேவலமான பள்ளியில் தனது குழந்தைகளை சேர்க்கிறார்கள் அவர்களை என்ன செயல்வது.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
24-நவ-202213:11:16 IST Report Abuse
ram மாணவர்களிடம் வீரத்தை பராக்கிரமத்தை காட்டிய தமிழக காவல் துறைக்கு திமுக ஐ டி விங் சார்பாக பாராட்டு விழா எடுக்கப்படும். காவல் துறை அவர்கள் கட்டுபாட்டில் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X