மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை : தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்க கடலில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது.இதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில், வரும், 27ம் தேதி வரை மிதமான மழைக்கே
TNWeather, IMDChennai, Chennai Weather, தமிழகம், புதுச்சேரி, மழை, வானிலை, சென்னை வானிலை, தமிழக வானிலை, Tamil Nadu, Puducherry, Rain, Weather,  Tamil Nadu Weather,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்க கடலில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது.

இதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில், வரும், 27ம் தேதி வரை மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது.


latest tamil news


சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 29 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், தாமரைப்பாக்கத்தில், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

சென்னை கலெக்டர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி, 2; கீழ்பென்னாத்துார், பொன்னேரி, பூண்டி, தண்டையார்பேட்டை, ஆவடி, சென்னை நுங்கம்பாக்கம், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X