மதுரை : மதுரையில் நடந்த மாவட்ட விளையாட்டு போட்டிகளில் இளமனுார் அரசு ஆதிதிராவிடர்நல மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 19 பதக்கங்கள் வென்று சாதித்துள்ளனர்.
மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த குத்துச்சண்டை, ஜூடோ போட்டிகளில் பங்கேற்ற இப்பள்ளி மாணவிகள் குத்துச்சண்டையில் 3 வெள்ளி, 3 வெண்கலம், ஜூடோவில் 2 வெள்ளி, 5 வெண்கலம், மாணவர்கள் பிரிவில் 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றனர்.
இம்மாணவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் தலைமையாசிரியர் பரஞ்ஜோதி டேவிட் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. ஆசிரியர் மகேந்திரபாபு வரவேற்றார். பயிற்சியாளர்கள் ஐஸ்வர்யா, விஜய் ஆனந்த், பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜா பங்கேற்றனர். ஆசிரியர்கள் சுந்தரமூர்த்தி, ஆறுமுகசாமி, லஜபதி, கதிரவன், தனலட்சுமி, தேவி, சரஸ்வதி, அகிலாமேரி, சுகுணா, சாரதா சவுந்தரி பங்கேற்றனர்.