துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன்: 2 ஆண்டுக்கு முன்பே மிரட்டிய அப்தாப்!

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: புதுடில்லியில் காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய அப்தாப், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, 'துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன்' என மிரட்டியதாக, போலீசில் ஷ்ரத்தா புகார் அளித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா, தன் காதலி ஷ்ரத்தாவுடன் புதுடில்லியில் தனியாக வீடு எடுத்து
Shraddha Murder Case, Aftab, Shraddha, அப்தாப், ஷ்ரத்தா

புதுடில்லி: புதுடில்லியில் காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய அப்தாப், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, 'துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன்' என மிரட்டியதாக, போலீசில் ஷ்ரத்தா புகார் அளித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா, தன் காதலி ஷ்ரத்தாவுடன் புதுடில்லியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். காதலியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக்கி, அதை புதுடில்லியின் பல்வேறு இடங்களில் அப்தாப் வீசினார். இதையடுத்து அப்தாபை போலீசார் கைது செய்தனர்.


இந்நிலையில், புதுடில்லிக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, மும்பையில் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததும், அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.


latest tamil news


இது குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 2020 நவ., 23ல் மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு, தன் நண்பர் ஒருவருடன் வந்த ஷ்ரத்தா, எழுத்துப்பூர்வமாக அப்தாப் மீது புகார் அளித்துள்ளார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த ஆறு மாதங்களாகவே அப்தாப் என்னை அடித்தும், துன்புறுத்தியும் வருகிறார். இது, அவரது பெற்றோருக்கும் நன்றாக தெரியும். என்னை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசப் போவதாக மிரட்டுகிறார். எனக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனக்கு ஏதாவது நேரிட்டால், அதற்கு அவரே காரணம். இவ்வாறு அதில் அவர் எழுதியுள்ளார்.


சில நாட்கள் கழித்து போலீசாருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில், 'அப்தாபின் பெற்றோரிடம் பேசியுள்ளேன். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என, ஷ்ரத்தா குறிப்பிட்டுள்ளார். போலீஸ் ஸ்டேஷனுக்கு உடன் சென்ற நண்பர் வாயிலாக தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அப்தாபின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்த புதுடில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
24-நவ-202220:18:55 IST Report Abuse
MARUTHU PANDIAR இதெல்லாம் லவ் ஜிகாத் டெக்னீக் அப்படீங்கரங்க+++அது நிக்கப் போறதில்லையாம்++++பெற்றோர் வசம் தான் 90% பொறுப்பு உள்ளது.+++தக்க சமயத்தில் கண் விழிக்க வில்லை என்றால் இப்படித்தான் ங்கறாங்க.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
24-நவ-202219:52:30 IST Report Abuse
MARUTHU PANDIAR அத்தன் ஓப்பதை வாங்கின பிறகும் அந்த மிருகத்தின் பெற்றோரிடம் முறையிட்டாளாம்+++ஏன் விட்டு விட்டு தன்னுடைய பெற்றோரிடம் செல்ல வேண்டியது தானே? ருசி கண்ட பூனைக்கு " அவன்" வேண்டியிருப்பதால் மத்த எல்லாத்தையும் மைண்ட் பண்ணல போல அப்படீங்கறாங்க+++++
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-நவ-202211:46:26 IST Report Abuse
Lion Drsekar சொல்வதைத்தான் செய்வேன் என்று நிரூபித்துவிட்டார். தவறு அவர் மீது இல்லை, ஆங்கிலத்தில் "LOOK BEFORE YOU LEAM" என்பார்கள் எத்தினை சம்பவங்களைக் கண்டாலும், பார்த்தாலும் சிந்திக்கும் திறனை அறவே இழந்து ஏதோ ஒன்றின் பின்னால் செல்வதால் வரும் வினைதான் இது. வளர்ந்த பின்பு பெற்றோர்களையே உனக்கு என்ன தெரியும் என்று கேட்க்கும் காலம் . காலத்தின் கோலம் பெற்றோர்களும் அவர்கள் பிரச்னைக்கே நீதிமன்றத்திற்கு நேரம் சிலருக்கு அலுவலக நேரம் இப்படி போனால் குழந்தைகளை யார் காப்பாற்றப்போகிறார்கள், மக்கள் பிரநிதிகள் மேடை போட்டு, நாங்கள் இருக்கிறோம் வாருங்க, என்று வெளிப்படையாக கூறும் நிலையில் அவர்ளுக்கு துணைபுரிய சினிமா அவர்கள் சார்ந்த ஊடகங்கள் இப்படி போட்டிபோட்டுக்கொண்டு தோற்றத்தைப்பார்த்து தடுமாறி வழி தெரியாமல் தவிக்கும் இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் ஒரு படிப்பினையாக இருக்கும், சமீபத்தில் ஒரு திருமணம் தாலி கட்டும் நேரத்தில் நிறுத்தப்பட்டு நாங்கள் இருக்கிறோம் வாருங்கள் என்று கூறும் இயக்கத்தினர்கள் அந்த பெண்ணுக்கு தாங்கள் அழைத்து வந்திருக்கும் மகன்தான் கணவன் அவன்தான் தாலி கட்டவேண்டும் என்று கூற செய்வது அறியாத இரு குடும்பத்தார்களும் நிற்க வந்தவர்கள அந்த பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டனர். இதுதான் இன்றைய நிலை, யாரையுமே திருத்தவும் முடியவில்லை, குறை கூறவும் முடியாது அந்த அளவுக்கு நாகரீகமமும் மனித நேயமும் வளர்ந்து விட்டது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X