புவனகிரி,-பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துவிசாரிக்கின்றனர்.
கீழ்புவனகிரி அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த பழனிவேல் குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் குடும்பத்திற்கும் முன் விரோதம்இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், பழனிவேல் மனைவி புஷ்பலதா வீதியில் நடந்து சென்றார்.
அப்போதுஅங்கு நின்றிருந்த அன்பரசன் அவரை பார்த்து ஜாடையில் பேசினார். இதை தட்டிக் கேட்ட இருவருக்குள் பிரச்னைஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அன்பரசன், புஷ்பலதாவை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்துபுகாரின் பேரில், அன்பரசன், 33, மீது வழக்குப் பதிந்து புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.