தகவல் ஆர்வலர்களை 'டார்ச்சர்' செய்யும் அதிகாரிகள்!

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
''தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேள்வி கேட்டா, பொய் வழக்கு போடுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''அடப்பாவமே... எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்ல ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்குது... இதை, சகோதரர்களான டில்லிபாபு, தினேஷ் ஆகிய இருவர், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமா வெளியே கொண்டு வந்தாங்க பா...''இதனால, கோபமான கோவில் அதிகாரி
டில்லிபாபு, தினேஷ், தகவல், சட்டம்,


''தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேள்வி கேட்டா, பொய் வழக்கு போடுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''அடப்பாவமே... எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்ல ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்குது... இதை, சகோதரர்களான டில்லிபாபு, தினேஷ் ஆகிய இருவர், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமா வெளியே கொண்டு வந்தாங்க பா...

''இதனால, கோபமான கோவில் அதிகாரி ஒருத்தரும், உள்ளூர் போலீஸ் அதிகாரியும் கூட்டணி சேர்ந்து, சகோதரர்களுக்கு, 'டார்ச்சர்' குடுக்கிறாங்க... ரெண்டு பேர் மேல பொய் வழக்குப் பதிவு பண்ணிட்டாங்க பா...


latest tamil news



''அடிக்கடி திருட்டு, வழிப்பறியில ஈடுபடுற குற்றவாளிகளை, 110 குற்ற நடைமுறை சட்டத்தின்படி, ஆர்.டி.ஓ., முன்னாடி ஆஜர்படுத்தி, 'இனிமே இந்த மாதிரி சம்பவங்கள்ல ஈடுபட மாட்டோம்'னு பத்திரத்துல எழுதி வாங்குவாங்களே... அதே மாதிரி இவங்களையும் ஆஜர்படுத்தி, பத்திரம் எழுதி வாங்க இருக்காங்க... இதனால, சகோதரர்கள் நொந்து போயிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

நாயர் தந்த டீயை பருகிவிட்டு அனைவரும் கிளம்பினர். எதிரே வந்த இருவரை நிறுத்தி, ''வேதமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி வாங்கோ... ஸ்டேட்ஸ்ல இருந்து எப்ப வந்தேள்...'' என குப்பண்ணா பேச துவங்க, மற்றவர்கள் நகர்ந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-நவ-202217:23:31 IST Report Abuse
J.V. Iyer இப்படியெல்லாம் பொதுமக்களை டார்ச்சர் செய்யும் அதிகாரிகளும், அரசுகளும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
24-நவ-202211:20:35 IST Report Abuse
jayvee கோவில்கள் திருடர்களின் கூடாரமாக மாறியது பராசக்தி வசனத்தில் மட்டுமல்ல .. திராவிட ஆட்சியில் கூடத்தான்..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-நவ-202211:04:10 IST Report Abuse
Lion Drsekar அமைதியான முடியாட்சிக்கு எதிராக செயல்பட யாருக்குமே உரிமை இல்லை. அடுத்து தினமலர் வாசகர்களுக்கு இருக்கு ஆப்பு. நாம் ஒற்றுமையாக இருந்து நம்மைக்காத்துக் கொள்ளவேண்டும், நாம் அரசியல் கட்சியினரை சாராதவர்கள், எல்லோரும் ஒருவரே, நமது ஒரே தேசம் இந்தியா, அதுவே முடியாட்சிக்கு எதிரானது, நான் இந்தியனே இல்லை என்பார்கள் ஆனால் இங்குதான் வாழ்வார்கள், இதில் நாமும் காடுகளில் எல்லா மிருகங்களும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன, அழிந்துகொண்டுதான் இருக்கிறன அவைகளின் இனமும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது . கடலிலும் அதே நிலை, அதுவுக்கே நம் வாழ்வினிலும் . வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X