நான்கு மாதங்கள் வேலை பார்த்து ஏமாந்த 'ராணுவ வீரர் '

Added : நவ 24, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மீரட்: ராணுவத்தில் நான்கு மாதங்கள் வேலை பார்த்து சம்பளம் வாங்கிய பிறகே தான் ஏமாற்றப்பட்டுள்ளது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கு தெரிய வந்துள்ளது.உத்தர பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த மனோஜ் குமார் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார். கடந்த 2019ல் ராணுவத்தில் சேருவதற்காக முயற்சி செய்தபோது உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகரைச்
Uttar Pradesh,Indian Army,  Manoj Kumar, உத்தர பிரதேசம்,  ராணுவம்,  மனோஜ் குமார்,  போலி ஆவணங்கள்,  Army,  fake documents,

மீரட்: ராணுவத்தில் நான்கு மாதங்கள் வேலை பார்த்து சம்பளம் வாங்கிய பிறகே தான் ஏமாற்றப்பட்டுள்ளது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கு தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த மனோஜ் குமார் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார். கடந்த 2019ல் ராணுவத்தில் சேருவதற்காக முயற்சி செய்தபோது உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகரைச் சேர்ந்த ராகுல் சிங் என்பவரை சந்தித்துள்ளார்.

அப்போது நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் மனோஜ் குமார் தேர்வாகவில்லை; அதே நேரத்தில் ராகுல் சிங் சிப்பாயாக தேர்வானார். பணியில் சேர்ந்த பிறகு மனோஜ் குமாரை தொடர்பு கொண்ட ராகுல் சிங், ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.

பஞ்சாபின் பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாமிற்கு வரும்படி மனோஜ் குமாருக்கு ராகுல் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அங்கு ஒரு உயர் அதிகாரி மனோஜ் குமாருக்கு சில சோதனைகள் வைத்தார். ராணுவத்தில் சேருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பணி நியமனம் பெறுவதற்கு எட்டு லட்சம் ரூபாய் தரும்படி மனோஜ் குமாரிடம் ராகுல் சிங் கூறியுள்ளார். அவரும் பணத்தைக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து பணி நியமன உத்தரவு வந்து கடந்த ஜூலையில் மனோஜ் குமார் பதன்கோட் ராணுவ முகாமில் பணியில் சேர்ந்தார். அவருக்கு அடையாள அட்டை ரைபிள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நான்கு மாதங்களாக சம்பளமும் மனோஜ் குமாருக்கு கிடைத்து வந்தது.

இந்நிலையில் அந்த முகாமில் உள்ள வேறு சில ராணுவ வீரர்களுடன் மனோஜ் குமார் பேசியுள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவு அடையாள அட்டை உள்பட அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என்று ராகுல் சிங் கடந்த மாதம் ராணுவத்தில் இருந்து விலகினார். இதற்கிடையே மற்ற ராணுவ வீரர்கள் கொடுத்த தகவலின்படி மனோஜ் குமாரிடம் ராணுவ உயரதிகாரிகள் விசாரித்தபோது, இந்த உண்மைகள் தெரியவந்தன.

இது தொடர்பாக மீரட் போலீசில் மனோஜ் குமார் புகார் கொடுத்தார். அதன்படி, ராகுல் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மனோஜ் குமாரை தேர்வு செய்ததாக ராணுவ உயரதிகாரியாக நாடகமாடிய பிட்டு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

ராணுவத்தில் போலி ஆவணங்கள் மூலம் ஒருவர் பணியில் சேர்ந்துள்ளது படை வீரர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக ராணுவமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (5)

David DS - kayathar,இந்தியா
24-நவ-202215:27:53 IST Report Abuse
David DS தமிழ் நாட்டுல போலி அரசாங்கமே நடக்குது
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
24-நவ-202214:45:03 IST Report Abuse
raja இதுபோல் வேலை வாங்கி தருவதாக பூநாவிலிருந்து கேரியர் கோல் கன்ஸ்சல்டன்சி என்ற பெயரில் உள்ளவர்கள் interview என்று ஒரு நாடகக் நடத்தி லட்ச கணக்கில் அப்பவிகளிடம் பணம் பரிப்பதாக வாட்சப்பில் செய்தி உலா வருகிறது ஆனால் சம்பந்த பட்ட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
24-நவ-202212:44:53 IST Report Abuse
Krishnamurthy Venkatesan காதில் பூ சுற்றுகிறார்கள். ராணுவத்தில் சேர்ந்தவுடன் எவருக்கும் துப்பாக்கி கொடுக்க மாட்டார்கள். basic training 6 மாதங்கள் கட்டாயம். ராணுவத்தில் சேர்ந்த ஒரு ஜவான் training முடிந்து ரெஜிமென்டிற்கு போஸ்டிங் போக குறைந்த பட்சம் 2 வருடங்களுக்கு மேலாகும் . (ஒரு சில category களுக்கு ஒரு வருடங்கள்). பணம் கொடுத்து ஏமாந்தவன் எவ்வளவு முட்டாள்/அப்பாவி என்பது தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X