'ஆன்லைனில்' வெடிபொருட்கள் வாங்கிய நபர் கோவையில் கைது

Added : நவ 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கோவை: 'ஆன்லைனில்' வெடிபொருட்கள் வாங்கி பதுக்கி வைத்திருந்த நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்புக்கு பின், ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில், கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது ஆன்லைன் கணக்கில்
Coimbatore,  Online order, Explosives, ஆன்லைன், வெடிபொருட்கள், கோவை,  Kovai,

கோவை: 'ஆன்லைனில்' வெடிபொருட்கள் வாங்கி பதுக்கி வைத்திருந்த நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்புக்கு பின், ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது ஆன்லைன் கணக்கில் இருந்து, கடந்த மே மாதம், பொட்டாசியம், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்கள், 'ஆர்டர்' செய்து வாங்கியது தெரிந்தது. மாநகர போலீசார் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமார் மொத்த பழ வியாபாரம் செய்வது தெரிந்தது.

அவரிடம் பணிபுரியும் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகரை சேர்ந்த மாரியப்பன், 32, என்பவர் செந்தில்குமாரின் ஆன்லைன் கணக்கை பயன்படுத்தி வெடிபொருட்கள், 'ஆர்டர்' செய்து பெற்றது தெரிந்தது.

இதையடுத்து, சரவணம்பட்டி போலீசார் மாரியப்பனை பிடித்து விசாரணை நடத்தினர். இவர், கோவில்பட்டியில் உள்ள தன் பகையாளிகளை கொலை செய்ய திட்டமிட்டு வெடிபொருட்களை வாங்கியது தெரிந்தது.

மாரியப்பன் மீது, ஏற்கனவே கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரிடம் இருந்து 100 கிராம் பொட்டாசியம், 50 கிராம் சல்பர் பறிமுதல் செய்யப்பட்டது. வெடிபொருள் தடுப்புச்சட்டத்தில் அவர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-நவ-202212:17:54 IST Report Abuse
G. P. Rajagopalan Raju ஆன்லைனில் எப்படி வெடிப்பொருள் வாங்கலாம்? இதை தடை செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X