சிதம்பரம்-சிதம்பரம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில், கொடியேற்று விழா நடந்தது.
சிதம்பரம் பணிமனை தொழிற்சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
மண்டல பொருளாளர் குமார், சுபாஷ் முன்னிலை வகித்தனர். ஓட்டுனர் செயலர் மணிகண்டன் வரவேற்றார்.
மாநில பேரவை தலைவர் ஜெயசங்கர் பங்கேற்று, பாட்டாளி தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
மாநில பேரவை பொருளாளர் குப்புராஜன், பெயர் பலகையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மண்டல பொதுச்செயலர் ராமமூர்த்தி, தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அருள் நன்றி கூறினார்.