பண்ருட்டி-அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் இயல்புக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் ஜானகிராமன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சித்ரா, கயற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., சுடர்வேல்மூர்த்தி, தீர்மா னங்களை வாசித்தார்.
கூட்டத்தில் வி.சி., கட்சி கவுன்சிலர் அருள்செல்வம் பேசும்போது, 'சாலைகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுகிறது. அவை விரைவில் சேதமாகிறது. அதனால், சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும்' என்றார்.
அப்போது, சேர்மன் ஜானகிராமன் குறுக்கிட்டு, 'சிமெண்ட் சாலை அமைக்க அரசு அனுமதியில்லை' என தெரிவித்தார்.
தி.மு.க., கவுன்சிலர் குமரகுரு பேசும்போது, 'பொதுநிதியில் வழங்கப்பட்ட பணிக்கு ஒப்பந்தபுள்ளி கோர வேண்டும். அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும்' என்றார். இதற்கு பதிலளித்த பி.டி.ஓ., சித்ரா, 'வரும் 30ம் தேதி ஒப்பந்த புள்ளி நடத்தப்படும்' என்றர்.
தி.மு.க., கவுன்சிலர் ராஜசேகர், 'திட்ட மதிப்பீடு செய்திட பொறியாளர் பிரிவில் உரிய பணியாளர்கள் இல்லை. கூடுதல் அலுவலக உதவியாளர் நியமிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.