விருத்தாசலம்-மூதாட்டியை தாக்கிய தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கம்மாபுரம் அடுத்த சொட்டவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி மனைவி அஞ்சலை, 60. இவரது வீட்டுக்கு எதிரில், அதேபகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் பள்ளம் தோண்டி உள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பிரசாந்த், தாய் தேவகி ஆகியோர் அஞ்சலையை திட்டி தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் பிரசாந்த், தேவகி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.