கும்பகோணம் மவுனசாமி மடத்தில் 4 ஐம்பொன் சிலைகள், ஓவியம் பறிமுதல்

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பழமையான மவுனசாமி மடத்தின் நிர்வாகி பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக, பல்வேறு ஹிந்து அனுப்பினர், 20 பேர் கையெழுத்திட்ட மனுவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சமீபத்தில் வழங்கினர்.இதையடுத்து, மடத்தின் ரகசியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சிலைகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பழமையான மவுனசாமி மடத்தின் நிர்வாகி பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக, பல்வேறு ஹிந்து அனுப்பினர், 20 பேர் கையெழுத்திட்ட மனுவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சமீபத்தில் வழங்கினர்.
latest tamil newsஇதையடுத்து, மடத்தின் ரகசியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சிலைகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்தனர். ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிறப்பித்த சோதனை உத்தரவுகளுடன் மவுனசாமி மடத்தில் சோதனை செய்தனர்.latest tamil newsசோதனையின் போது, மடத்தின் ஒரு பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சிலைகளை குழுவினர் கண்டுபிடித்தனர். சிலைகளின் ஆதாரத்தை நிரூபிக்குமாறு மடாலய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மடத்து அதிகாரிகளால் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை, மேலும் அவர்கள் தங்களிடம் உள்ள சிலைகள் ஆதாரம் இல்லாத சட்டவிரோத சிலைகள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.latest tamil newsஇதையெடுத்து, 23 செ.மீ., உயரம் உள்ள நடராஜர், 14 செ.மீ.. உயரம் உள்ள திருவாசியுடன் கூடிய சிவகாமி அம்மன் சிலை,11 செ.மீ., உயரமுள்ள விநாயகர்,37 செ.மீ., உயரம் உள்ள பாலதண்டாயுதபாணி சிலைகள் மற்றும் 63 நாயன்மார்கள் தஞ்சாவூர் பாணி ஓவியம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-202218:56:57 IST Report Abuse
venugopal s கையும் களவுமாக பிடிபட்ட பின்னரும் இது போன்ற போலி சாமியார்கள்,மடாதிபதிகளை ஆதரிப்பவர்களை என்ன என்று சொல்வது?
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
24-நவ-202220:48:22 IST Report Abuse
Dharmavaanஅறிவிலியின் பேச்சு. மடங்கள்தான் இந்த கோயில்களின் பாதுகாவலர்கள் அறங்கேட்ட துறை தோன்றும் முன்பு.அங்கு பழங்கால சிலைகள் இருப்பது சகஜம்.அவரகல் திருடர்களல்ல....
Rate this:
Cancel
Senthil Kumar - chennai,இந்தியா
24-நவ-202217:14:45 IST Report Abuse
Senthil Kumar பத்திரமாக வைத்தவர்
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
24-நவ-202213:07:50 IST Report Abuse
Cheran Perumal இந்த சிலைகள் விரைவில் அமெரிக்காவுக்கு பயணப்படும். இதேபோல வேறு சிலைகள் செய்து இங்கு வைத்துவிடுவார்கள். அந்தக்கலையில் இவர்கள் நிபுணர்கள்.
Rate this:
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
24-நவ-202219:09:41 IST Report Abuse
Gurumurthy Kalyanaramanஇதைத்தான் நானும் நினைத்தேன். நீஙகள் சொல்லி விட்டீரகள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X