சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அறிவியல் சில வரிச் செய்திகள்

Added : நவ 24, 2022 | |
Advertisement
வேர்களின் மூலம் எது?தாவரங்களின் வேர்கள், மண்ணில் ஈரப்பதமுள்ள இடத்தைத் தேடி வளரக்கூடியவை. ஈரம் உள்ள இடம் நோக்கி போகவும், நீரை எட்டியதும் வளர்வதை நிறுத்தவும், தடிமனாக வளரவும் வேர்களுக்குத் தெரியும். அத்தகைய உணர்வை வேர்களுக்குத் தருவது எது? தாவரவியல் இதற்கான விடையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தாவரங்கள் பிழைத்திருக்க நீர் அவசியம். அந்த நீரை உறிஞ்சும்
அறிவியல் சில வரிச் செய்திகள்


வேர்களின் மூலம் எது?தாவரங்களின் வேர்கள், மண்ணில் ஈரப்பதமுள்ள இடத்தைத் தேடி வளரக்கூடியவை. ஈரம் உள்ள இடம் நோக்கி போகவும், நீரை எட்டியதும் வளர்வதை நிறுத்தவும், தடிமனாக வளரவும் வேர்களுக்குத் தெரியும். அத்தகைய உணர்வை வேர்களுக்குத் தருவது எது? தாவரவியல் இதற்கான விடையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தாவரங்கள் பிழைத்திருக்க நீர் அவசியம். அந்த நீரை உறிஞ்சும் வேர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களை, பிரிட்டனிலுள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர்.பசுமை சர்க்கியூட்டுகள்அதிகரிக்கும் மின்னணுக் கழிவுகளில், கணினி போன்ற கருவிகளில் இருக்கும், அச்சிட்ட சர்க்யூட்டுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே, அவற்றை சூழலுக்கு இணக்கமானவையாக தயாரிக்கலாம் என்கிறது ஜெர்மனியிலுள்ள இன்னோவேஷன் லேப்.
இதன் ஆராய்ச்சியாளர்கள், தாமிர மை மற்றும் சில பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, முப்பரிமாண அச்சு முறையில், வளைந்துகொடுக்கும் தன்மையுள்ள சர்க்கியூட்டுகளை அச்சிட்டுள்ளனர்.
இந்த புதிய சர்க்கியூட்டுகள், கெட்டி அட்டை சர்க்கியூட்டுகளைவிட 15 மடங்கு குறைந்த தடிமன் உள்ளவையாக இருப்பது சிறப்பு.


கிருமி தரும் மறுவாழ்வுதொழுநோய்க்கு சிகிச்சை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, தொழுநோயை உண்டாக்கும் கிருமிகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், தொழுநோயை பரப்பும் பாக்டீரியாக்களால், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்ய உதவ முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எப்படி? தொழுநோய் பாக்டீரியாக்களால் கல்லீரலை மீண்டும் ஆரோக்கியமாக வளரவைக்க முடியும்.
இதனால், அந்த பாக்டீரியாக்களை கல்லீரல் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்கிறது, 'செல்ரிப்போர்ட்ஸ் மெடிசின்' இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு.


தானோட்டி வாடகை கார்முதல் முறையாக, அமெரிக்காவில், சான் பிரான்சிஸ்கோ நகரில், தானோட்டி வாகன வாடகை சேவையை, பொதுமக்களுக்கு வழங்க அனுமதி கிடைத்துள்ளது. கூகுளின் தானோட்டி வாகன நிறுவனமான 'வேமோ,' இனி, நேரடியாக தனது வேமோ செயலி மூலம் சான் பிரான்சிஸ்கோ நகரவாசிகளுக்கு, தானோட்டி வாடகை சேவையை வழங்கலாம்.
இதற்கு முன்பு, 'வேமோ' கார்களில், பாதுகாப்புக்காக ஒரு மனித ஓட்டுநரும் அமர்ந்திருப்பார். இனி, முன் இருக்கையில் ஆளில்லா தானோட்டி வாகனம் வாடகைக்கு வலம் வரும்.


ஹைட்ரஜன் எப்படி உதவும்?வருங்காலத்தில், காற்று மாசுகளை அகற்றுவதில் ஹைட்ரஜன் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், பெட்ரோலியத்திற்கு மாற்று எரிபொருளாக இருப்பதன் மூலம் ஹைட்ரஜன் அதை செய்யப்போவதில்லை என்கிறது 'நேச்சர்' இதழ்.
பின்னே எப்படி? எஃகு உற்பத்தி முதல் பிளாஸ்டிக் தயாரிப்பு வரை, பல தொழிற்சாலை முறைகளில் இருக்கும் மாசுபாட்டினைக் களையவும், உபரியாக கிடைக்கும் சூரிய மின்சாரம், காற்று மின்சாரத்தை திரவ வடிவில் தேக்கி வைக்கவும் ஹைட்ரஜன் உதவும் என்கிறது 'நேச்சர்' இதழ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X