ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் தாலுகா, ஜேடர்பாளையத்தில் உள்ள கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் உலக மீன் வளத்தை முன்னிட்டு, மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார் ஆய்வாளர் கோகிலவாணி தலைமை வகித்தார்.
கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் கலைவாணி கலந்து கொண்டு மீன் வளத்தை பாதுகாப்பது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து விளக்கி கூறினார்.
கூட்டத்தில் கொத்தமங்கலம், பள்ளாபாளையம், ஜேடர்பாளையம், ஆனங்கூர் மற்றும் பொன்மலர்பாளையத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.