ஓமலுார்: ஓமலுார் பஸ் ஸ்டாண்ட், 2.5 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. அங்கு வளர்ச்சி திட்ட பணி மேற்கொள்ள, பொறியியல் துறை சார்பில், 'மண் மாதிரி' சேகரிப்பு பணி தொடங்கியது.
இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி கூறியதாவது:பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தவும், புதிததாக வணிக வளாகம், ஓட்டல், கழிப்பறை, பயணியர் எளிதாக வந்து
செல்லும்படி, பஸ்களை முறையாக அதன், 'ரேக்'குகளில் நிறுத்துவது என்பன உள்ளிட்ட
பல்வேறு திட்டப்பணிகளை, 5 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. முதற்கட்டமாக, மண் மாதிரி சேகரிப்பு பணி தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.