ஆபாச வசை: திருப்பூர் பா.ஜ., அலுவலகத்தில் டெய்சி, திருச்சி சூர்யா ஆஜர்

Added : நவ 24, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
திருப்பூர்: மொபைல் போனில் வாக்குவாதம் மற்றும் ஆபாசமாக பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க, திருப்பூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு, சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் விசாரணை கமிட்டி முன் ஆஜராகினர்.பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா
BJP, Trichy Surya, Deisy, பாஜக, திருச்சி சூர்யா, டெய்ஸி, விசாரணை, ஆஜர்

திருப்பூர்: மொபைல் போனில் வாக்குவாதம் மற்றும் ஆபாசமாக பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க, திருப்பூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு, சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் விசாரணை கமிட்டி முன் ஆஜராகினர்.பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் மொபைல் போனில் பேசினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே இது தொடர்பாக, இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பா.ஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்காக விசாரணை குழு அமைக்கப்பட்டது.அதன்படி திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்சி மற்றும் திருச்சி சூர்யா ஆகியவரிடம் விசாரணை நடத்தினர்.


அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது. இந்த விசாரணை அறிக்கை தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணை கமிட்டியினர் தெரிவித்தனர். மேலும், உட்கட்சி தொடர்பானது என்பதால் மற்ற தகவல்கள் தெரியவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Vellore,இந்தியா
24-நவ-202220:25:18 IST Report Abuse
Indian நாமெல்லாம் அடிச்சிக்குவோம் மறுநாள் துடைச்சிக்குவோம் கட்டி பிடிச்சிக்குவோம் நமக்கெல்லாம் உங்களைப்போல மானம் ரோஷம் எல்லாம் கிடையாது.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
24-நவ-202220:04:14 IST Report Abuse
Sankar Ramu இதைபோல் திமுக வில் செய்ய ஆரம்பித்தால் , தினமும் இதைமட்டுமே செய்யமுடியும் அவ்வளவு கொச்சையான கட்சி. பிஜேபி யில் ஆரம்பத்திலே கண்டிப்பது நல்ல விஷையம்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
24-நவ-202218:00:58 IST Report Abuse
r ravichandran அந்த காலத்தில் அண்ணாதுரை, கலைஞர், நாவலர் உட்பட திமுக கட்சி தலைவர்கள் பேசாத, எழுதாத ஆபாச பேச்சுக்கள் உண்டா.
Rate this:
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
25-நவ-202211:05:35 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM அப்போ கட்சியின் பெயரை பாரதிய திருட்டு முன்னேற்ற கழகம் என்று மாற்றவேண்டியதுதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X