மாசு, தூசு, துரித உணவு என இந்த நவீன வாழ்க்கை முறையால் நாம் சந்திக்கும் பிரச்னையில் ஒன்று அதிகப்படியான கூந்தல் உதிர்வு. மேலும் தலை சீவும் போது, கொத்துக் கொத்தாக கூந்தல் வருவது மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தும். நீள கூந்தலோ, சின்ன கூந்தலோ அடர்த்தியாக இருந்தால் அது போதும் நமக்கு. முடி உதிர்வை கட்டுபத்தும் ஒரு பொருள் என்றால் அது கறிவேப்பிலைதான். கறிவேப்பிலையின் பயன் அறிந்தால் அதை யாரும் ஒதுக்கி வைக்க மாட்டார்கள் என கூறலாம்.
தயிர் மற்றும் கறிவேப்பிலை ஹேர் பேக்:
![]()
|
தயிரில் உள்ள நற்குணங்கள் உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிப்பதோடு, உச்சந்தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பொடுகு ஆகியவற்றை அகற்ற உதவும். ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் ஒரு கப் தயிர் ஆகியவற்றை ஒரு மிக்சியில் சேர்த்து பேஸ்ட் போல் அரைக்கவும். அதை கூந்தல் முழுவதும் தடவவும். 30 முதல் 40 நிமிடங்கள் ஊறவிட்டு, வெது வெதுப்பான நீரில் குளிக்கவும். கூந்தல், மென்மையாகவும், பளபளவென்றும் காட்சி அளிக்கும்.
கறிவேப்பிலை ஏன் கூந்தலுக்கு சிறந்தது?
கறிவேப்பிலை ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதம் நிறைந்தது. இதில் உள்ள வைட்டமின் பி கூந்தல் நரைப்பதை தடுக்கும். அதுமட்டுமல்ல முடி உதிர்வு, பொடுகுத் தொல்லை, உச்சந்தலை அரிப்பு என தலைக்கு ஏற்படும் பல பிரச்னைகளை போக்கும் சிறந்த டானிக் போன்று செயல்படும். கறிவேப்பிலையை கொண்டு, கூந்தல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்:
தயிர் மற்றும் கறிவேப்பிலை ஹேர் பேக்:
![]() Advertisement
|
தயிரில் உள்ள நற்குணங்கள் உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிப்பதோடு, உச்சந்தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பொடுகு ஆகியவற்றை அகற்ற உதவும். ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் ஒரு கப் தயிர் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு பேஸ்ட் போல் ஆக்கவும். அதை கூந்தல் முழுவதும் தடவவும். 30 முதல் 40 நிமிடங்கள் ஊறவிட்டு, வெது வெதுப்பான நீரில் குளிக்கவும். கூந்தல், மென்மையாகவும், பளபளவென்றும் காட்சி அளிக்கும்.
கறிவேப்பிலை, நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் ஹேர்பேக்:
![]()
|
அரை கப் கறிவேப்பிலை, இரண்டு டீஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் மற்றும் ஒரு நெல்லிக்காயை எடுத்து மிக்ஸியில் பேஸ்ட்போல் அரைக்கவும். இந்த ஹேர்பேக்கை உச்சந்தலையில் இருந்து, கூந்தல் நுனி வரை தடவவும். சுமார் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் அலசவும். சாம்பூ பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வெந்தயம் கண்டிசனர் போல் செயல்ப்பட்டு, கூந்தலை மென்மையாக்கும். இந்த கலவை உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை ஹேர் ஆயில்:
![]()
|
தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். இரண்டு நிமிடம் கழித்து அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்க்கவும். கறிவேப்பிலை இலை நன்கு பொரிந்தவுடன், அடுப்பை அணைக்கவும். இந்த எண்ணெய் கலவையை ஆறவைத்து, வடிகட்டி, ஹேர் ஆயில் போல் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலையின் நற்குணங்கள் கலந்து உங்கள் கூந்தலை அடர்த்தியாக்கும். மேலும் கூந்தலும் ஷைனிங்காக இருக்கும்.
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஹேர்பேக் :
![]()
|
வெங்காயம் முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த மருந்து. கால்சியம், வைட்டமின் பி6, சி, சல்ஃபர் போன்ற சத்துக்கள் நிறைந்தது. மேலும் நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும். அதனால் வெங்காயச் சாறினை தலை முடிக்கு பயன்படுத்துவதால் முடி உதிர்வு நீங்கி, கூந்தலை அடர்த்தியாக வளரச் செய்யும்
அரை கப் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை எடுத்து மிக்சியில் அடித்து, துணியில் வடிக்கட்டவும். அந்த ஜூசை, சின்ன பஞ்சை கொண்டு நனைத்து கூந்தல் வேர்களில் தடவவும். பின் 30 நிமிடங்கள் அப்படியே ஊறவைக்கவும். வெங்காய நாற்றம் பிடிக்காதவர்கள் ஷாம்பூ கொண்டு குளிக்கலாம்.