அருண் கோயலை தேர்தல் கமிஷனராக நியமிக்க அவசரம் ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
புதுடில்லி: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயலை புதிய தேர்தல் கமிஷனராக 24 மணி நேரத்தில் நியமித்தது எப்படி, ஏன் இவ்வளவு அவசரம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இந்தியத் தேர்தல் கமிஷனராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதற்கிடையே இது தொடர்பான வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி,
Supreme Court, Arun Goyal, Election Commissioner, SC, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், அருண் கோயல், தேர்தல் கமிஷனர், நியமனம், அவசரம்

புதுடில்லி: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயலை புதிய தேர்தல் கமிஷனராக 24 மணி நேரத்தில் நியமித்தது எப்படி, ஏன் இவ்வளவு அவசரம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இந்தியத் தேர்தல் கமிஷனராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதற்கிடையே இது தொடர்பான வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.


நேற்று நடந்த விசாரணையில் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி இன்று (நவ.24) மீண்டும் வழக்கு விசாரணை தொடர்ந்த நிலையில், அருண் கோயல் நியமனம் தொடர்பான விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனையடுத்த நீதிபதி ஜோசப் அமர்வு மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பியது.


''பல மாதங்களாகத் தேர்தல் கமிஷனர் பதவி காலியாக இருந்த நிலையில், அதை நிரப்பாதது ஏன்? புதிய தேர்தல் கமிஷனராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? அவ்வளவு அவசரம் ஏன்? 4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி? என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும்'' எனக் கேளவி எழுப்பினர்.latest tamil news


மேலும், ''தேர்தல் கமிஷனர் நியமன கட்டமைப்பு அக்கறை கொள்கிறோம். தேர்தல் கமிஷனர்களின் பெயர்கள் பரிந்துரைக்கு எடுத்துக் கொள்வது அதிலிருந்து ஒருவரை கமிஷனராக நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்படும் முறை என்பது மிகவும் மர்மமாக இருக்கிறது'' எனவும் கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dsfsf - chennai,இந்தியா
24-நவ-202221:42:14 IST Report Abuse
dsfsf எந்த ஒரு விதிமுறையையும் மோடி அரசு எதிலும் கடைபிடித்ததில்லை . வாய்சவாடலும் பிரச்சாரங்களும் மட்டும்தான் மோடியின் கொள்கை . பதவி வெறி பிடித்த மோடி இப்போதாவது ராஜினாமா செய்ய வேண்டும்
Rate this:
karuppasamy - chennai,இந்தியா
25-நவ-202211:22:30 IST Report Abuse
karuppasamyதெளிவாக சொன்னீர்கள். இது நீதிபதிகளுக்கும் தெரியும் அரசு வாய்லே சொல்ல நினைகிறார்கள் அது எப்படி முடியும், கடைசியில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதும் நமக்கு தெரியும் . இது இந்திய வரலாறு...
Rate this:
Cancel
nv -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-202221:21:36 IST Report Abuse
nv நீதிபதிகள் அவர்களாகவே புது நீதிபதிகளை நியமனம் செய்யும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் ஏன் செய்ய கூடாது? உச்சநீதிமன்றம் நம்பிக்கை இழந்து வருகிறது..
Rate this:
Cancel
கே.சுரேந்திரன் - Udaipur,இந்தியா
24-நவ-202220:18:55 IST Report Abuse
கே.சுரேந்திரன் ஏழை எளிய மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி நீதி மன்றங்களுக்கு நடையாய் நடந்து தங்கள் வாழ்நாளின் பல வருடங்களை அர்பணிக்கிறார்கள்.இதனை கூடிய வரை தவிர்ப்பதற்கு நீதி மன்றங்கள் வழி முறைகளை ஆராயவேண்டும்.பாமர மக்கள் நாட்டு நலனுக்காக பலரும் தங்களை அர்ப்பணிக்கிறார்கள். இதனை மனதில் கொண்டு உயர் பதவி மற்றும் அதிகாரங்களை தங்கள் கையில் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொரு செயல்களையும் மிக மிக கவனமாக கையாள வேண்டும் .இதுவே அனைத்து நாட்டு மக்களின் விருப்பம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X