காங்., எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' நிறுத்தி வைப்பு

Updated : நவ 25, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது நிறுத்தி வைக்க்பட்டு உள்ளது.சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கட்சியின் மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டசபை
Congress MLA, Ruby Manoharan, Suspend, காங்கிரஸ், நாங்குநேரி தொகுதி, எம்எல்ஏ, ரூபி மனோகரன், சஸ்பெண்ட், தற்காலிக நீக்கம்

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது நிறுத்தி வைக்க்பட்டு உள்ளது.


சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கட்சியின் மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்எல்ஏ.,வுமான ரூபி மனோகரன் மற்றும் எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.


அதில் வருகிற 24ம் தேதி (இன்று) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.



அதன்படி, இன்று ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தும், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ கடிதம் அனுப்பி இருந்தார்.


இந்த நிலையில் ரூபி மனோகரனை தற்காலிகமாக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.



latest tamil news


இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக ரூபி மனோகரன் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல. அடுத்து நடைபெற உள்ள கூட்டத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.


அவர் அளிக்கும் விளக்கத்தை காங்கிரஸ் குழு பரிசீலனை செய்யும். 63 மாவட்ட காங் தலைவர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.



ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நீதிக்கு எதிரானது: தினேஷ் குண்டுராவ்


தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காங்கிரசின் விசாரணை குழு தலைவர் ராமசாமி நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்ததை அறிந்தேன். இயற்கை நீதி கோட்பாட்டிற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைக்கிறேன் என கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
25-நவ-202210:14:42 IST Report Abuse
sankaseshan ஆள் ஆளுக்கு தண்டல் பண்ணறான் காங்கிரஸ் கட்சியில் இன்னும் எவ்வளவு நாளுக்கு
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-நவ-202209:17:52 IST Report Abuse
raja அடடே. காங்கிரஸ் இல்லாத இந்தியா விரைவில் நிறைவேரிடும் போல தெரியுதே........
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-நவ-202209:14:29 IST Report Abuse
அசோக்ராஜ் அம்பது வருசமா தநாகாக பாடுபட்டு வாங்கின விருது கோமாளிக்கட்சி என்கிற விருது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X