பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீர் நியமனம்

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்து, அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் இன்று(நவ., 24) அறிவித்துள்ளார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு இருந்து வருகிறது. இந்நிலையில், பாக்., ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்து, அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் இன்று(நவ., 24) அறிவித்துள்ளார்.




latest tamil news



நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு இருந்து வருகிறது. இந்நிலையில், பாக்., ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம், வரும் 29ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ஆறு மூத்த அதிகாரிகளின் பெயர்களை, ராணுவம் அனுப்பியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது.


இதில், இரண்டு பேர் இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கூட்டுப் படைகளின் தலைவர் பதவி தான் உயர்ந்த பதவி. இருப்பினும், அனைத்து முடிவுகளையும் ராணுவத் தளபதியே எடுப்பார்; அவருக்குத் தான் அதிக அதிகாரம் உள்ளது. இந்தப் பதவிகளுக்கு உரியோரை, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுப்பார்.



latest tamil news



இது தொடர்பாக, சமீபத்தில் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசிக்கும் தன் சகோதரரும், பாக்., முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீபுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.


பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரையும், கூட்டுப் படைகளின் தலைவராக சாஹிர் ஷம்ஷட் மிர்சாவை நியமனம் செய்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,இந்தியா
25-நவ-202206:11:20 IST Report Abuse
Fastrack பாஜ்வாவுக்கு ரெண்டு நாள் முன் ரிட்டையர் ஆக வேண்டியவருக்கு எதுக்கு தலைமை பதவி .. திராவிட மாடல் மாதிரி தளபதி தேர்ந்தெடுக்கறாங்க
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-நவ-202217:25:21 IST Report Abuse
J.V. Iyer இந்த ஆளும் ஐஎஸ் தீவிரவாதிகளின் கூட்டா?
Rate this:
Anand - chennai,இந்தியா
24-நவ-202218:07:16 IST Report Abuse
Anandஆம், அதுமட்டுமல்ல தலிபான், லஷ்கர், ஹிஜ்புல், ஜெய்ஷ், PFI, SDPI, SFJ, காலிஸ்தான், இத்தாலி காங்கிரஸ், திருட்டு திராவிஷம், உண்டியல்ஸ், குஜ்ரி, மமதை, முப்தி, அப்துல்லாஸ் போன்றோருடனும்..........
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
24-நவ-202217:19:59 IST Report Abuse
Anand இந்த ஓநாய்களை பற்றிய நியூஸ் நமக்கு எதற்க்கு?
Rate this:
Indian - Vellore,இந்தியா
24-நவ-202219:05:56 IST Report Abuse
Indianஉங்களைப்போலவே அங்கும் இப்படித்தான் சொல்வார்கள் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X