விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே 'சனாதனம்' இருக்கு: திருமா முன்பு சீறிய 'பெண் சிறுத்தை'

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே சனாதனம் இருப்பதாகவும், ஆண் சமூகம் திருந்த வேண்டும் எனவும் அக்கட்சியின் பெண் நிர்வாகி ஆவேசமாக பேசினார்.திமுக.,வின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து சனாதனம் குறித்து விமர்சித்து ஆவேசமாக பேசி வருகிறார். 'சனாதனத்தை வேரறுப்போம்; ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!' என பல மேடைகளில்
விசிக, திருமாவளவன், சனாதனம், விடுதலை சிறுத்தைகள், திருமா, மணிவிழா, பெண், ஆவேசம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே சனாதனம் இருப்பதாகவும், ஆண் சமூகம் திருந்த வேண்டும் எனவும் அக்கட்சியின் பெண் நிர்வாகி ஆவேசமாக பேசினார்.திமுக.,வின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து சனாதனம் குறித்து விமர்சித்து ஆவேசமாக பேசி வருகிறார். 'சனாதனத்தை வேரறுப்போம்; ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!' என பல மேடைகளில் முழங்கினார்.


இந்த நிலையில் திருமாவளவன் மேடையில் இருக்கும்போதே அவரது கட்சிக்குள்ளேயே சனாதனம் இருப்பதாக கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் ஆணாதிக்கம் இருப்பதாக குற்றம் சாட்டிய அந்த பெண் நிர்வாகி பேசுகையில், மைக்கை அணைத்ததும் சர்ச்சையாகியுள்ளது.சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.


அப்போது கட்சியின் மகளிர் அமைப்பு செயலாளர் நற்சோனை என்பவர் பேசுகையில், 'மாவட்ட நிர்வாகத்தினர் பெண்களை அவ்வளவு கேவலமாக திட்டியுள்ளனர். 'டேப் ரெக்கார்ட்' பண்ணி வச்சுருக்கேன். அதையெல்லாம் நான் காட்டுகிறேன். ஆண் சமூகம் இன்னும் திருந்தவில்லை; ஆண் சமூகம் திருந்தவேண்டும். நாங்கள் சனாதனத்தை எதிர்க்கிறோம்.latest tamil news


இந்த கட்சிக்குள் (விசிகவுக்குள்) சனாதனம் இருக்கிறது. டாப் டூ பாட்டம் கட்சிக்குள் சனாதனம் இருக்கிறது என பேசிக் கொண்டிருந்த போதே மைக் 'ஆப்' செய்யப்பட்டது.


அவர் பேசிய சில நிமிடங்களிலேயே பேச்சின் போக்கை கவனித்த திருமாவளவன், பின்னால் அமர்ந்திருந்த ஒருவரிடம் மைக்கை அணைக்க உத்தரவிட்டார். உடனே அவர் எழுந்து நற்சோனை பேசிக்கொண்டிருக்கையில் மைக்கை ஆப் செய்தார்.நடந்த விஷயங்களை சமாளிப்பதுபோல், திருமாவளவன் பேசுகையில், 'நற்சோனை களப்பணியில் தனக்கு ஏற்பட்ட கசப்பை இங்கே பேசியது வரவேற்புக்குரியது. முரண்பாடுகள் விவாதத்திற்கு வரும்போது தான் அதற்கு தீர்வு காண முடியும்' எனப் பேசினார்.


சனாதனத்தை வேரறுப்போம் எனக் கூறிவரும் திருமாவளவன் கட்சிக்குள்ளேயே சனாதனம் இருப்பதாக பெண் ஒருவர் ஆவேசமாக பேசியது வைரலாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
24-நவ-202222:52:30 IST Report Abuse
R.MURALIKRISHNAN என்னை நோக்கி பாயும் தோட்டா, அப்ப இவரே இவர் சொன்ன சனாதானத்தை விட்டு வெளியே வரலையா ? அப்ப புத்தகம் பிரிண்ட் பண்ணினது இவங்க கட்சிக்குள்ளே சப்ளை பண்றக்கா? அய்யோ அய்யோ
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
24-நவ-202222:40:21 IST Report Abuse
Manguni சரக்கு மிடுக்கு ka
Rate this:
Cancel
24-நவ-202221:39:11 IST Report Abuse
ஆரூர் ரங் சரக்கு மிடுக்கு ஆட்கள் ஆட்டம் போடும் இடத்தில் பெண்ணடிமை மனப்பான்மை இருக்கத்தான் செய்யும்😡. அது தெரிந்தும் அங்கே இருக்கும் பெண் சனாதனம் அது இதுன்னு பேசலாமா? இன்றே வீட்டுக்கு ஆட்டோ வரலாம்🤬
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X