வாய் துர்நாற்றம் நீங்க...

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வியர்வை நாற்றம், போல், நமக்கு மிகவும் அசவுகரியத்தை தருவது வாய் துர்நாற்றம். தினமும் இரண்டு வேளை பல் துலக்கினாலும், இந்த வாய் துர்நாற்ற பிரச்னை சிலருக்கு போவதில்லை. தூங்கி எழுந்தவுடன் பொதுவாக எல்லாருக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும். அது மிகவும் இயற்கையானது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காகவும் துர்நாற்றம் வீசுவதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது. வாய்
Lifestyle, Health, mouthodour, Remedies, லைப்ஸ்டைல், ஆரோக்கியம், வாய் துர்நாற்றம், தீர்வுகள்

வியர்வை நாற்றம், போல், நமக்கு மிகவும் அசவுகரியத்தை தருவது வாய் துர்நாற்றம். தினமும் இரண்டு வேளை பல் துலக்கினாலும், இந்த வாய் துர்நாற்ற பிரச்னை சிலருக்கு போவதில்லை. தூங்கி எழுந்தவுடன் பொதுவாக எல்லாருக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும். அது மிகவும் இயற்கையானது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காகவும் துர்நாற்றம் வீசுவதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது.

வாய் துர்நாற்றத்திற்கு வாய் வறட்சியும் முக்கிய காரணமாக இருக்கிறது. இதை 'க்சீரோஸ்டோமியா' (Xerostomia) என்று அழைப்பர். வாய் வறண்டு போவதால் அங்கு பாக்டீரியா உருவாக்கம் அதிகமாக இருக்கும். இதனாலும் துர்நாற்றம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


வாய் துர்நாற்றம் வர வேறு சில காரணங்கள்…



வாய் வறண்டு போக தொடர்ந்து பேசுதல், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை காரணங்களாக உள்ளது. அல்சர், வயிற்று புண், அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்னைகள், பல்சொத்தை அல்லது ஈறுகளில் பிரச்னை • அதேபோல் நாக்கை சுத்தம் செய்யாமல் விட்டாலும் இந்த பிரச்னை வரும்.


பல் பிரச்னையும் துர்நாற்றமும்:



latest tamil news



தினமும் பல், நாக்கு பராமரிப்பு அவசியம். பற்களை சுத்தம் செய்வதன் மூலம் பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். சரியாக பல் துலக்கவில்லை என்றால் பற்காரை உண்டாகும். இதுதான் தொடர் துர்நாற்றத்துக்கு காரணமாக அமையும். அதனால் தினமும் இரு வேளை பல் துலக்க வேண்டும். மேலும் வராம் இருமுறை உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.


நோய்களும் துர்நாற்றமும்:


பாக்டீரியா கிருமியால் வரும் துர்நாற்றத்தை மருந்து மூலம் குணப்படுத்தலாம். இருந்தாலும், தொடர்ந்து துர்நாற்றம் வீசினால் மருத்துவரை சந்தித்து அதற்கான காரணத்தை அறிய வேண்டும். சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டாலும் துர்நாற்றம் வீசும். சர்க்கரை நோய், புற்றுநோய் இருந்தாலும், இந்த பிரச்னைவரும். மேலும் இந்த நோய்களுக்காக எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகளின் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.



துர்நாற்றம் போக்க சில டிப்ஸ் :



latest tamil news



• தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தால், வாய் வறண்டுபோவதைத் தடுக்க முடியும். மேலும் துர்நாற்றம் தரும் பாக்டீரியாவும் வெளியேறும்.
• சிகரெட், புகையிலை, மது போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்.
• தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் இருமுறை பல் துலக்க வேண்டும்.
• உப்பு நீர் மட்டுமல்லாமல், பிளாக், கிரீன் டீ கொண்டு வாயைக் கொப்பளிப்பதால், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும்.
• டங்க் கிளினர் அல்லது பிரெஷ் பயன்படுத்தியும் நாக்கைச் சுத்தம் செய்யலாம்.
• சோம்பை வாயில் போட்டு மெல்ல வேண்டும் இதனால் துர்நாற்றம் வராது. ஜீரண சக்தியும் மேம்படும்.
• அடிக்கடி துளசி இலையை வாயில் போட்டு மெதுவாக மென்று வர மெல்ல மெல்ல துர்நாற்றம் குறையும் .
• நல்ல குடல் இயக்கதிற்கு நார்ச்சத்து அதிகமுள்ள காய்கனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-நவ-202221:25:24 IST Report Abuse
Natarajan Ramanathan அப்பெண்டிசிடிஸ் (குடல்வால்) பிரச்சினை இருந்தாலும் வாய் துர்நாற்றம் வரலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X