இரட்டையர் நகரம்

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | |
Advertisement
இங்கு யார் வீட்டிலாவது இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அது அதிசயமாக பார்க்கப்டும்,பேசப்படும்ஆனால் ஒரு ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஒற்றைக் குழந்தை பிறந்தால்தான் ஆச்சரியம் அந்த ஊரில் வீடு தவறாமல் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றன பிறக்கின்றனமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டின் தென்மேற்கு நகரமான இக்போ-ஓராவில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துlatest tamil news


இங்கு யார் வீட்டிலாவது இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அது அதிசயமாக பார்க்கப்டும்,பேசப்படும்


ஆனால் ஒரு ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஒற்றைக் குழந்தை பிறந்தால்தான் ஆச்சரியம் அந்த ஊரில் வீடு தவறாமல் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றன பிறக்கின்றன


latest tamil news


மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டின் தென்மேற்கு நகரமான இக்போ-ஓராவில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்து வருகிறது.


நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோஸுக்கு தெற்கே 135 கிலோமீட்டர் தொலைவில் 2 லட்சம் மக்கள் வசிக்கும் நகரமான இக்போ-ஓராவில் அதிகளவில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான அறிவியல் விளக்கம் எதுவும் இல்லை. ஆனால் இக்போ-ஓராவில் உள்ள பெண்கள் தாங்கள் விரும்பி உண்ணும் ஒருவகை கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ‛அமலா' என்ற உணவுதான் இதற்கு காரணம் என நம்புகின்றனர் ஆனால் மருத்துவஉலகம் அதையும் ஏற்கவில்லை ஆராய்ச்சிகள் தொடர்கிறது.


latest tamil news


தலைநகர் அபுஜாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜான் ஓஃபெம் கூறுகையில், "அவர்கள் சாப்பிடும் பொருட்களில் சில ஹார்மோன்கள் அதிக அளவில் உள்ளன, அதன் விளைவாகக்கூட இப்படி நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.


உலகின் வெகு சில பகுதிகளில்தான் இரட்டையர்களை கேலி செய்கின்றனர் ஆனால் நாங்கள் இரட்டையர்களாக பிறந்ததை எண்ணி மகிழ்கிறோம் எங்களுக்குள் எப்போதும் குழப்பமில்லை இது கடவுளின் ஆசீர்வாதம் என்போரே இங்கு அதிகம்.


latest tamil news


இது பற்றி அறிந்த மக்கள் அதிசயமான ஊராக எண்ணி எங்களை பார்க்க அதிகளவில் வருகைதருகின்றனர் அப்படி வருபவர்களை வரவேற்கவும் அவர்களின் வியப்பிற்கு விருந்து வைக்கவும் நாங்களே வருடத்திற்கு ஒரு முறை அக்டோபர் மாதம் 8 ம்தேதி இரட்டையர் திருவிழாவினை நடத்தி மகிழ்ந்து மகிழ்விக்கிறோம்.


வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒரு முறை வாருங்களேன்.


நன்றி:தினமலர் வாரமலர்


-எல்.முருகராஜ்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X