சென்னை: சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதி டி.ராஜா உள்ளிட்ட 7 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

பல்வேறு நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து கொலீஜியம் பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்த ராஜா ராஜஸ்தான் ஐகோர்ட்டிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள நாகார்ஜூன், ஆந்திரா மாநில நீதிபதி பட்டு தேவானந்த் சென்னை ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யவும், சென்னை ஐகோர்ட் நீதிபதி வேலுமணி மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளது.

தொடர்ந்து தெலங்கானா மாநில நீதிபதி அபிஷேக் ரெட்டி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரது பெயரும் பரிசீலனையில் உள்ளது. குஜராத் மாநில ஐகோர்ட் நீதிபதி நிகில் கரேல் பெயர் கொலீஜியம் பட்டியலில் இடம் பெற வில்லை.