வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,: 'டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்' நிறுவனம், 'பிஸ்லரி இன்டர்நேஷனல்' நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
பிரபல தொழிலதிபரான ரமேஷ் சவுகான், அவரது தண்ணீர் வணிகமான பிஸ்லரி இன்டர்நேஷனலை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும்; டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனமும் அதில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமமும், கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான தாக்கலில், பிஸ்லரி நிறுவனத்தை வாங்க பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
![]()
|
இருப்பினும், டாடா நிறுவனம் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிஸ்லரியை வாங்க இருப்பதாக உலா வரும் செய்திகளை, சவுகான் மறுத்துள்ளார். அத்துடன், டாடா நிறுவனத்துக்கு விற்பது குறித்து, இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், தன்னுடைய மகள் ஜெயந்தி இந்த வணிகத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றும்; ஆனால், வணிகத்தை அப்படியே விட்டு விட முடியாது என்பதால், வேறு யாராவது தொடர்ந்து நடத்த விரும்புவதாகவும், 82 வயதாகும் ரமேஷ் சவுகான் கூறியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன், சவுகான் தன்னுடைய குளிர்பான பிராண்டுகளான 'தம்ஸ்அப், கோல்டு ஸ்பாட், சிட்ரா, மாஸா, லிம்கா' ஆகியவற்றை, 'கோக - கோலா'வுக்கு விற்பனை செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.