முந்திரி தின விழா மணல் சிற்பம் பண்ருட்டி அருகே வடிவமைப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
பண்ருட்டி:பண்ருட்டி அருகே, உலக சாதனைக்காக, 448 முந்திரி பழ உருவங்கள் அடங்கிய மெகா மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், முந்திரி தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் முந்திரி மணல் சிற்பம் உருவாக்கி, உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், 20
முந்திரி தின விழா மணல் சிற்பம் பண்ருட்டி அருகே வடிவமைப்பு

பண்ருட்டி:பண்ருட்டி அருகே, உலக சாதனைக்காக, 448 முந்திரி பழ உருவங்கள் அடங்கிய மெகா மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், முந்திரி தினம் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் முந்திரி மணல் சிற்பம் உருவாக்கி, உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், 20 அடி அகலம், 20 அடி நீளத்தில், 12 அடி உயரம் கொண்ட மணல் சிற்பம், 448 முந்திரி பழ உருவங்களுடன் வடிவமைக்கப்பட்டது.

இந்நிகழ்வை, வெர்ச்சு புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் பதிவு செய்தது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் மலர்வாசகம் தலைமை தாங்கினார். செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

சங்க ஆலோசகர் மதன்சந்த், ஜெயா கேஷ்யூஸ் ஜெயமூர்த்தி, மாவட்ட தொழில் மைய உதவிப் பொறியாளர் அறிவழகன், வெர்ச்சு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கார்த்திகேயன், முந்திரி தொழிலதிபர்கள் தீனதயாளன், மாதவா, மலர் இண்டர்நேஷனல் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளரான சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மணல் சிற்பத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். வெர்ச்சு புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவன கார்த்திகேயன், பதிவிற்கான சான்றுகளை வழங்கினார்.

விழாவில் சங்க பொருளாளர் செல்வமணி, முந்திரி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் செந்தில், சீனுவாசன், அருள்ஜோதி, மாரிசெல்வம், சதீஷ் ஆரோக்கியராஜ், பாரதிதாசன், ராஜேஷ், சிவா புட்ஸ் சிவக்குமார், அண்ணா பொறியியல் கல்லுாரி முன்னாள் புல முதல்வர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X