வில்லங்க சான்று சேவை குறைபாடு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

Added : நவ 24, 2022 | |
Advertisement
கடலுார்:கடலுாரில் வீட்டு மனைக்கான வில்லங்க சான்று வழங்கியதில் சேவை குறைபாடு காரணமாக, ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு, ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க பதிவாளர் அலுவலகங்களுக்கு, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 61; ஓய்வு பெற்ற பேராசிரியர்.இவர், கடலுார் கோண்டூர் ரட்சகர் நகரில், கடந்த 1996ம் ஆண்டு, விஜயலட்சுமி என்பவரிடம்

கடலுார்:கடலுாரில் வீட்டு மனைக்கான வில்லங்க சான்று வழங்கியதில் சேவை குறைபாடு காரணமாக, ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு, ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க பதிவாளர் அலுவலகங்களுக்கு, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 61; ஓய்வு பெற்ற பேராசிரியர்.

இவர், கடலுார் கோண்டூர் ரட்சகர் நகரில், கடந்த 1996ம் ஆண்டு, விஜயலட்சுமி என்பவரிடம் இருந்து வீட்டு மனை வாங்கினார்.

இந்த இடத்திற்கு வில்லங்கம் பார்த்தபோது, மனையின் உரிமையாளர் ராமமூர்த்தி மட்டுமே என்றும், வில்லங்கம் எதுவும் இல்லையென்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராமமூர்த்தி, கடந்த 2015ம் ஆண்டு மனையை விற்க முடிவு செய்து, வில்லங்க சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்தார்.

அப்போது வழங்கப்பட்ட வில்லங்க சான்றிதழில், ராமமூர்த்திக்கு மனையை விற்ற விஜயலட்சுமி என்பவர் அதே மனையை, ஆனந்த்பாபு என்பவரிடம் கிரைய ஒப்பந்த உடன்படிக்கை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் ராமமூர்த்தி, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக விசாரித்த அப்போதைய மாவட்ட பதிவாளர், இதுதொடர்பாக கோர்ட்டில் பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ராமமூர்த்தி, கடலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

நுகர்வோர் மன்ற தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி விசாரித்தனர்.

விசாரணை முடிந்த நிலையில், 'தவறான வில்லங்க சான்றிதழை வழங்கியது ஒரு சேவை குறைபாடு, அதற்கு கடலுார் இணை சார் பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் தான் பொறுப்பு.

எனவே, மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் கடலுார் இணை சார் பதிவாளர் அலுவலகம் ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக ராமமூர்த்திக்கு வழங்க வேண்டும் என, நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X