சாலை விபத்தில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் 'ஜப்தி'

Added : நவ 24, 2022 | |
Advertisement
திண்டிவனம்:சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால், திண்டிவனத்தில் அரசு பஸ் 'ஜப்தி' செய்யப்பட்டது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன், 39; இவர் கடந்த 2016ம் ஆண்டு, திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் எதிரே சாலையை கடந்தபோது அரசு பஸ் மோதி இறந்தார். இதுகுறித்து திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நஷ்டஈடு
 சாலை விபத்தில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் 'ஜப்தி'

திண்டிவனம்:சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால், திண்டிவனத்தில் அரசு பஸ் 'ஜப்தி' செய்யப்பட்டது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன், 39; இவர் கடந்த 2016ம் ஆண்டு, திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் எதிரே சாலையை கடந்தபோது அரசு பஸ் மோதி இறந்தார்.

இதுகுறித்து திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரகுமான், மனு தாரருக்கு 19 லட்சத்து 63 ஆயிரத்து 654 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

நஷ்டஈடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் கோர்ட் கட்டளை நிறைவேற்றுனர் மூலம், சென்னையிலிருந்து திண்டிவனம் வந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து, கோர்ட்டிற்கு கொண்டு சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X