லஞ்சம் வாங்கிய வழக்கு 'மாஜி' எஸ்.ஐ.,க்கு சிறை

Added : நவ 24, 2022 | |
Advertisement
நாகப்பட்டினம்:அடிதடி புகாருக்கு லஞ்சம் கேட்ட ஓய்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்உத்தரவிட்டது.நாகை மாவட்டம் கீழையூரைச் சேர்ந்தவர் பிரபு. இவர் கடந்த 2011 ம் ஆண்டு, அடிதடி புகாரில் தனது உறவினர் பெயரை நீக்க வேண்டும் என கீழையூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ., சிவானந்தம் என்பவரை அணுகியுள்ளார். அதற்கு சிவானந்தம், 3,000

நாகப்பட்டினம்:அடிதடி புகாருக்கு லஞ்சம் கேட்ட ஓய்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்உத்தரவிட்டது.

நாகை மாவட்டம் கீழையூரைச் சேர்ந்தவர் பிரபு. இவர் கடந்த 2011 ம் ஆண்டு, அடிதடி புகாரில் தனது உறவினர் பெயரை நீக்க வேண்டும் என கீழையூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ., சிவானந்தம் என்பவரை அணுகியுள்ளார். அதற்கு சிவானந்தம், 3,000 ரூபாய் கேட்டுள்ளார்.

பிரபு நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி, பிரபு லஞ்ச பணத்தை அளிக்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவானந்தத்தை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை நாகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா, லஞ்சம் கேட்ட சிவானந்தத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தர விட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X