ரயில்களின் பெட்டிகளை மாற்றிவிட்ட அதிகாரிகள்! கோவையை 'திண்டாட வைக்கும்' தெற்கு ரயில்வே

Added : நவ 24, 2022 | |
Advertisement
கோவை ரயில்வே ஸ்டேஷனில், தினமும் பல மணி நேரம் வீணாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களை, வேறு நகரங்களுக்கு இயக்க கோரிக்கை எழுந்ததும், பெட்டிகளை ரயில் மாற்றி விட்டு, தெற்கு ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டு திசை திருப்பியுள்ளனர். கோரிக்கைகோவை ரயில்வே ஸ்டேஷனில், தினமும் பல மணி நேரம் வீணாக நிற்கும் இரண்டு ரயில்களை, இடைப்பட்ட நேரத்தில் வேறு நகரங்களுக்கு இயக்க

கோவை ரயில்வே ஸ்டேஷனில், தினமும் பல மணி நேரம் வீணாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களை, வேறு நகரங்களுக்கு இயக்க கோரிக்கை எழுந்ததும், பெட்டிகளை ரயில் மாற்றி விட்டு, தெற்கு ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டு திசை திருப்பியுள்ளனர்.


கோரிக்கை



கோவை ரயில்வே ஸ்டேஷனில், தினமும் பல மணி நேரம் வீணாக நிற்கும் இரண்டு ரயில்களை, இடைப்பட்ட நேரத்தில் வேறு நகரங்களுக்கு இயக்க வேண்டுமென்ற கோரிக்கை, கோவையிலுள்ள அமைப்புகளால் முன்வைக்கப்பட்டது.

அதை நிராகரிக்கும் விதமாக, இவ்விரு ரயில்களின் அனைத்துப் பெட்டிகளையும் அதிகாரிகள் மாற்றிவிட்டுள்ளனர்.

கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், செம்மொழி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் பெட்டிகள் தான், இப்படி மாற்றப்பட்டுள்ளன.

இவற்றில், கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கடந்த 2008 பிப்., 1ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவையிலிருந்து மன்னார்குடி செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில், 2013 ஜூன் 12லிருந்து இயக்கப்படுகிறது.

இந்த ரயில்கள் இரண்டும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் இரண்டு ரயில்களுமே, பகல் நேரங்களில் பல மணி நேரம் கோவை ரயில்வே ஸ்டேஷனில் வீணாக நிற்கின்றன.

தினமும் 17 மணி நேரம் 30 நிமிடங்கள் நிற்கும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை, கோவையிலிருந்து காரைக்கால் அல்லது ராமேஸ்வரத்துக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை - மன்னார்குடி இடையே இயக்கப்படும் இந்த ரயில், அதிகாலை 4:45 மணிக்கு கோவைக்கு வந்து விடுகிறது. அதன்பின், இரவு 12:15 மணிக்கு தான் புறப்படுகிறது.


வலியுறுத்தல்



இந்த ரயிலை, திருநள்ளாறு செல்வோருக்கு உதவும் வகையில், பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வழியாக காரைக்கால் வரை இயக்க வேண்டும் அல்லது ராமேஸ்வரத்துக்கு இயக்க வேண்டு மென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதேபோல, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், பகலில் 12 மணி நேரம், கோவை ரயில்வே ஸ்டேஷனில் நிற்கிறது.

அதை கோவை - மதுரை 'இன்டர்சிட்டி' எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க வேண்டுமென்றும் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி, ரயில்வே அமைச்சகத்துக்கு மனுக்களை அனுப்பியுள்ளன.

இந்த கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், இவ்விரு ரயில்களின் அனைத்துப் பெட்டிகளையும் முற்றிலுமாக மாற்றி விட்டு, ரயில்கள் பராமரிப்பு நேரம் போக வீணாக நிற்கும் நேரத்தைக் குறைத்துக் காண்பித்துள்ளனர்.

பத்தாண்டுகளாக இந்த ரயில்களின் பெட்டிகளை மாற்றி விடாத ரயில்வே அதிகாரிகள், வேறு நகரங்களுக்கு இந்த ரயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தவுடன், இப்படிச் செய்துள்ளனர்.

இனியாவது, ரயில்வே அமைச்சகம் தலையிட்டு, இந்த ரயில்களை கோவை மக்களின் கோரிக்கைப் படி இயக்க வைப்பது அவசியம்.


- நமது சிறப்பு நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X