இருளர் பெண்கள் கொடுமை இன்ஸ்., ஜாமின் மனு தள்ளுபடி

Added : நவ 24, 2022 | |
Advertisement
விழுப்புரம்:திருக்கோவிலுார் அருகே இருளர் பெண்கள் பாலியல் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் சீனிவாசனின் 'ஜாமின்' மனு விழுப்புரம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.திருக்கோவிலுார் அடுத்த தி.மண்டபம் கிராம இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரை, கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றுக்காக, திருக்கோவிலுார் போலீசார் காவல் நிலையம்

விழுப்புரம்:திருக்கோவிலுார் அருகே இருளர் பெண்கள் பாலியல் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் சீனிவாசனின் 'ஜாமின்' மனு விழுப்புரம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

திருக்கோவிலுார் அடுத்த தி.மண்டபம் கிராம இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரை, கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றுக்காக, திருக்கோவிலுார் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது, ஒரு கர்ப்பிணி மற்றும் 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பெண்களை, போலீசார் பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இந்தசம்பவத்தில், அப்போதைய திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் ஆகிய 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இதில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கடந்த நவ.14ம் தேதி விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தும், சீனிவாசனை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து திருக்கோவிலுார் போலீசார், இன்ஸ்பெக்டர் சீனிவாசனை கைது செய்தனர். சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சீனிவாசன் ஜாமின் கோரி மீண்டும் விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். நேற்று முன்தினம் அந்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X