மான் வேட்டைவாலிபர் கைது

Added : நவ 24, 2022 | |
Advertisement
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புள்ளி மானை வேட்டையாடி இறைச்சி சமைத்து கொண்டிருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் 2 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதியில் சிலர் வேட்டையாடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வனவர் இளவரசன் தலைமையில் எட்டு பேர் குழுவினர் ரோந்து சென்றனர். புல்பத்தி பீட்
 மான் வேட்டைவாலிபர் கைது

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புள்ளி மானை வேட்டையாடி இறைச்சி சமைத்து கொண்டிருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் 2 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதியில் சிலர் வேட்டையாடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வனவர் இளவரசன் தலைமையில் எட்டு பேர் குழுவினர் ரோந்து சென்றனர். புல்பத்தி பீட் பகுதியில் மான் வேட்டையாடப்பட்டது கண்டறியப்பட்டு விசாரணையில் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து, சவுந்தர் அதில் ஈடுபட்டது தெரிந்தது.

அவர்களைத் தேடிச்சென்றபோது மாரிமுத்து வீட்டில் மான் இறைச்சி சமைத்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து 2 கிலோ இறைச்சி, வேட்டையாட பயன்படுத்தப்பட்ட பேட்டரி லைட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். தப்பி ஓடிய சவுந்தரை தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X