பதுக்கிய 22 டன் உரம் பறிமுதல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருச்சி:மணப்பாறை அருகே, குடோனில் பதுக்கி வைத்திருந்த 22 டன் உர மூட்டைகளை, வேளாண்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி, திருச்சி மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதனால், உர மூட்டைகள் பதுக்கல் குறித்து ஆய்வு செய்யுமாறு, தமிழக அரசு

திருச்சி:மணப்பாறை அருகே, குடோனில் பதுக்கி வைத்திருந்த 22 டன் உர மூட்டைகளை, வேளாண்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி, திருச்சி மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதனால், உர மூட்டைகள் பதுக்கல் குறித்து ஆய்வு செய்யுமாறு, தமிழக அரசு அறிவுறுத்தியது.

இதையடுத்து, திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி பகுதிகளில் உள்ள உரக்கடைகளில், வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள ஒரு உரக்கடையில், உரமூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக, அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

துவரங்குறிச்சி வெள்ளைவிநாயகர் கோவில் அருகே, முகமது இக்பால் என்பவர் நடத்தி வரும் உரக்கடையில், வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, கொள்முதல் செய்த உரங்கள், விற்கப்படும் உரங்களின் அளவு மற்றும் இருப்பு குறித்து, முறையான தகவல் அளிக்காமல், உர மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

உர மூட்டைகள் இருப்பு வைத்திருந்த குடோனில் இருந்து, 22 டன் எடையுள்ள யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உர மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோனுக்கு 'சீல்' வைத்தனர்.

அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 22 டன் உர மூட்டைகள், தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான குடோனுக்கு நேற்று முன்தினம்எடுத்துச் செல்லப்பட்டது.

பதுக்கி வைத்திருந்த உர மூட்டைகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம், துவரங்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X