சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பாசப்பிணைப்பு நீடிக்குமா?

Added : நவ 24, 2022 | |
Advertisement
(ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கார்ட்டூன்)'ரொம்பத் தான் கொஞ்சி குலாவுகின்றனர்...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பற்றி கிண்டலடிக்கின்றனர், இங்குள்ள பா.ஜ.,வினர்.அதிரடியான அரசியல் மாற்றங்களுக்கு பெயர் பெற்றது பீஹார். இங்கு கூட்டணிகள் அடிக்கடி மாறுவது வழக்கம்.
அக்கம் பக்கம்

(ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கார்ட்டூன்)

'ரொம்பத் தான் கொஞ்சி குலாவுகின்றனர்...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பற்றி கிண்டலடிக்கின்றனர், இங்குள்ள பா.ஜ.,வினர்.

அதிரடியான அரசியல் மாற்றங்களுக்கு பெயர் பெற்றது பீஹார். இங்கு கூட்டணிகள் அடிக்கடி மாறுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கூட்டணி ஆட்சியில் இருந்தன.

கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. பின், ஐக்கிய ஜனதா தளத்துக்கும், பா.ஜ.,வுக்கும் கூட்டணி உருவாகி, அவர்கள் ஆட்சி அமைத்தனர். சமீபத்தில் இந்த கூட்டணி முறிந்து, மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ளது.

முதல்வர் நிதிஷ் குமாருக்கும், துணை முதல்வர் தேஜஸ்விக்கும், ஏற்கனவே ஏழாம் பொருத்தமாக இருந்தது. இப்போது ஒரே கூட்டணியில் வந்து விட்டதால், இருவருக்கும் இடையிலான பாசம் பொங்கி வழிகிறது.

சமீபத்தில் தேஜஸ்வியின் பிறந்த நாளின் போது, அவரது வீட்டுக்குச் சென்ற நிதிஷ் குமார், அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு தேஜஸ்வியும், 'நிதிஷ் குமார் என் சித்தப்பா போன்றவர்...' என, உருகினார். இதைப் பார்த்த பா.ஜ.,வினரோ, 'இந்த பாசப்பிணைப்பு இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என பார்க்கலாம்...' என்று, கேலி பேசுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X