சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: லோக்சபா தேர்தலில் மத்தியில், 400 எம்.பி.,க்களுடன் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். அதில், 25 பேர் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பது, கட்சி தலைமை எனக்கு கொடுத்த பணி; அதற்காக, அனைத்து பகுதிகளிலும் கட்சியை வளர்த்து வருகிறோம்.டவுட் தனபாலு: தமிழகத்தில், 25 பா.ஜ., - எம்.பி.,க்கள் என்றால், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க.,வுக்கு மீதமுள்ள, 14 இடங்கள் தானா...? இதற்கு
டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: லோக்சபா தேர்தலில் மத்தியில், 400 எம்.பி.,க்களுடன் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். அதில், 25 பேர் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பது, கட்சி தலைமை எனக்கு கொடுத்த பணி; அதற்காக, அனைத்து பகுதிகளிலும் கட்சியை வளர்த்து வருகிறோம்.

டவுட் தனபாலு: தமிழகத்தில், 25 பா.ஜ., - எம்.பி.,க்கள் என்றால், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க.,வுக்கு மீதமுள்ள, 14 இடங்கள் தானா...? இதற்கு அவங்க சம்மதிப்பாங்களா அல்லது 39 தொகுதிகளில் பா.ஜ., தனித்து நின்று, 25ல் வெற்றி வாகை சூடுமா என்ற, 'டவுட்' எழுதே!

எதிர்க்கட்சி தலைவர் அ.தி.மு.க.,வின் பழனி சாமி: தமிழகத்தில் தடையின்றி, 24 மணி நேரமும், 'பார்' செயல்படுகிறது. கலால் வரி செலுத்தாமலே, ஆலையில் உற்பத்தியாகும் மதுபானங்களை எடுத்து வந்து பார்களில் விற்கின்றனர். இதனால், அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. இதையெல்லாம் விசாரிக்கும்படி கவர்னரிடம் கேட்டுள்ளோம்.

டவுட் தனபாலு: 'டாஸ்மாக்' என்பது, உங்க ஆட்சியில, ஆளுங்கட்சியினருக்கு தங்க முட்டையிடும் வாத்து போல இருந்துச்சு... அதை, இவங்க வைர சுரங்கமா மாத்திட்டாங்க... அதனால, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்ற தி.மு.க.,வின் வாக்குறுதி, கானல் நீராகவே போயிடும் என்பதில் கடுகளவும், 'டவுட்'டே இல்லை!



பா.ஜ., தேசிய செயலர் அருண் சிங்: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், காசி முதல் ராமேஸ்வரம் வரையிலும் நாடு ஒன்றுபட்டே உள்ளது. ராகுல் நடைபயணம் மேற்கொண்டு, தேசத்தை இணைக்க வேண்டிய அவசியமில்லை. அவர் காலை, மாலை என, சாதாரண நடைபயிற்சி போலவே நடைபயணம் செல்கிறார்.

டவுட் தனபாலு: ராகுலுக்கு பொழுது போகாம கூட நடைபயணம் போயிட்டு போறார்... ஆனா, உங்க கட்சியில பிரதமர் மோடி துவங்கி, அடிமட்ட தொண்டன் வரைக்கும், அவரது நடைபயணத்தை தானே விமர்சிக்கிறீங்க... அவரது நடைபயணம் பா.ஜ.,வினருக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami - Tirupur,இந்தியா
25-நவ-202211:15:02 IST Report Abuse
Sami Definitely, BJP will win on next election, because, they will announce themselves they won even no one vote for them.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X