சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : நவ 24, 2022 | |
Advertisement
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேட்டி: தி.மு.க., ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டதாக, முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். பத்திரிகையாளர்களுக்கு தெரியாததில்லை. யார் ஊழல் செய்தது என்று, உலகத்துக்கே தெரியும். தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அது தெரிந்து தான், முதல்வராக ஸ்டாலினை தேர்வு செய்துள்ளனர்.சரிதான்... அப்படி என்றால், 2011 தேர்தலில் கருணாநிதியை
பேச்சு, பேட்டி, அறிக்கை

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேட்டி: தி.மு.க., ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டதாக, முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். பத்திரிகையாளர்களுக்கு தெரியாததில்லை. யார் ஊழல் செய்தது என்று, உலகத்துக்கே தெரியும். தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அது தெரிந்து தான், முதல்வராக ஸ்டாலினை தேர்வு செய்துள்ளனர்.

சரிதான்... அப்படி என்றால், 2011 தேர்தலில் கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பிட்டு, ஜெயலலிதாவை மக்கள் தேர்வு செஞ்சதும் இதே அடிப்படையில் தானா?

***

தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: எந்த உழைப்பும் இல்லாத தியாகராஜன், திட்டி தீர்க்கப்பட்ட செந்தில் பாலாஜி என, பலர் படிகளே இல்லாத ஏணியின் வழியே உச்சத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்கிற போது, எங்களை போன்ற உழைப்பை கொடுத்த சுயமரியாதைக்காரர்கள் உகந்தவர்களாக இல்லாமல் போவதில் ஆச்சரியமில்லை. விடுதலை ஆகியிருக்கிறோம், மன அமைதி. பொதுத் தளத்தில் தொடர்ந்து இயங்குவோம்.

தற்போது, சஸ்பெண்ட்டில் இருப்பவர், 'டிஸ்மிஸ்' நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பது அப்பட்டமாக தெரிகிறது!

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை
: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறை, நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பணியாற்றவும், கால்நடைகள் மேய்க்கவும், விவசாயத்திற்காகவும் அதிக அளவில் குழந்தைகள் பயன்படுத்தப்படுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ள மாவட்டங்களில், தொழிலாளர் நலத்துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவர்களின் கல்வி தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம்' என்ற பெயர் எடுத்தால் தான், தமிழகத்துக்கு பெருமை!

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செயலர் ரவீந்திர நாத் பேட்டி: மலேரியா பரவு கிறதா என்பதை கண்டறிய, வீடு வீடாக சென்று ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளும் போது ஏற்படும் குளறுபடிகளை காரணம் காட்டி, ஆய்வக பணியாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர்; இது, மிகுந்த வருத்தத்தை தருகிறது.

இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி டிச., 7ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

என்னங்க இது அநியாயமா இருக்கு... 'நோயாளிக்கு தப்பு தப்பா சிகிச்சை குடுத்து, அவங்க இறந்து போயிட்டா டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது... ரத்த பரிசோதனையில குளறுபடி நடந்தா, தண்டிக்கக் கூடாது' என்றால், மருத்துவ பணியாளர்கள் எல்லாரும் சட்டத்துக்கும், தர்மத்துக்கும் அப்பாற்பட்டவர்களா?



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X