ரேஷனில் மாதம் ரூ.1,000 இலவசம் திட்டத்தை துவக்க முன்னோட்டமா?

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தில் உள்ள 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களில், 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை. அவர்களுக்கு விரைவில் கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இது மாதம் 1,000 ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை துவக்குவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ரேஷன் கடைகள் வாயிலாக 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மானிய

சென்னை:தமிழகத்தில் உள்ள 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களில், 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை. அவர்களுக்கு விரைவில் கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

இது மாதம் 1,000 ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை துவக்குவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரேஷன் கடைகள் வாயிலாக 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, பேரிடர் நிவாரணமும் வழங்கப்படுகின்றன.

சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்சியை பிடித்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இதனால், பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு, தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறுவது தொடர்பான பயிற்சி கூட்டம், நடந்தது.

அதை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.

அதில், சண்முகசுந்தரம் பேசியதாவது:

ரேஷன் கடைகளில், 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதில் 14.60 லட்சம் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு துவக்கப்படாமல் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

வங்கி கணக்கு துவக்கப்படாமல் உள்ள கார்டுதாரர்களை, அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், புதிய கணக்கு துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மத்திய அரசு, இலவச மற்றும் மானிய திட்டங்களில் முறைகேட்டை தடுக்க, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அதற்குரிய தொகையை செலுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதை பின்பற்றி, தமிழக அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

எனவே, வங்கி கணக்கு இல்லாத, 14.60 லட்சம் கார்டுதாரர்களுக்கு கணக்கு துவக்கும் நடவடிக்கை, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, அரசு விரைவில் செயல்படுத்த இருப்பதற்கான முன்னோட்டமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X