இதே நாளில் அன்று

Added : நவ 24, 2022 | |
Advertisement
நவம்பர் 25, 1943 புதுக்கோட்டையில், 1894ல் பிறந்தவர் பி.கே.நாகலிங்கம். உடற்பயிற்சியாளரான இவர், ஜெர்மனிய பயில்வான் ஆய்கன் சாண்டோவை போன்றிருந்ததால், இவரின் ரசிகர்கள் ராஜா சாண்டோ என்று அழைத்தனர்; அந்தப் பெயரே நிலைத்தது.இவர் மும்பையில், பதங்கரின் நேஷனல் பிலிம் கம்பெனியில் சண்டை நடிகராக சேர்ந்து, பக்த போதனா என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து பல மவுன படங்களில் நடித்த இவர், ரஞ்சித்
 இதே நாளில் அன்று

நவம்பர் 25, 1943

புதுக்கோட்டையில், 1894ல் பிறந்தவர் பி.கே.நாகலிங்கம். உடற்பயிற்சியாளரான இவர், ஜெர்மனிய பயில்வான் ஆய்கன் சாண்டோவை போன்றிருந்ததால், இவரின் ரசிகர்கள் ராஜா சாண்டோ என்று அழைத்தனர்; அந்தப் பெயரே நிலைத்தது.

இவர் மும்பையில், பதங்கரின் நேஷனல் பிலிம் கம்பெனியில் சண்டை நடிகராக சேர்ந்து, பக்த போதனா என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து பல மவுன படங்களில் நடித்த இவர், ரஞ்சித் ஸ்டுடியோவில், மாத சம்பளத்திற்கு இயக்குனராகி, சினே ஹ் ஜோதி என்ற படத்தை இயக்கினார்.

பின், தமிழகம் திரும்பிய காலத்தில் பேசும் படங்கள் வந்ததால், பாரிஜாத புஷ்பஹரணம், மேனகா, வசந்த சேனா உள்ளிட்ட படங்களை இயக்கினார். அடுத்து, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்தார். புராண படங்கள் வந்த காலத்தில், சமூகப் படங்களை இயக்கி வெற்றி பெற்றார்.

நாயகனும், நாயகியும் பாடிக்கொண்டே இருந்த போது, அவர்களை வசனம் பேச வைத்தார். நடிகர், நடிகையை கைநீட்டி அடித்த கண்டிப்பான இயக்குனர்.

முதலில், புதினத்தை திரைப்படமாக எடுத்தவர். இவர், சிவகவி திரைப்படத்தை இயக்கி முடிக்கும் முன், 1943ல் இதே நாளில், தன், 49 வது வயதில் மறைந்தார். ஹிந்தி திரை உலகை ஆண்ட முதல் தமிழ் திரைக்கலைஞரின் நினைவு தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X