உலக வங்கியின் ரூ.1,763 கோடியில் மாற்றுத்திறனாளி உரிமை திட்டம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:''உலக வங்கி நிதியுடன், 1,763 கோடி ரூபாய் செலவில், மாற்றுத்திறனாளி களுக்கான உரிமைகள் திட்டம் துவக்கப்பட உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:அரசு பொறுப்பேற்றதும், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ௧,௦௦௦ ரூபாய், 2,000 ரூபாயாக

சென்னை:''உலக வங்கி நிதியுடன், 1,763 கோடி ரூபாய் செலவில், மாற்றுத்திறனாளி களுக்கான உரிமைகள் திட்டம் துவக்கப்பட உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.

அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

அரசு பொறுப்பேற்றதும், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ௧,௦௦௦ ரூபாய், 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது; 2.11 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயன்அடைந்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசு வேலை வாய்ப்புகளில், 4 சதவீதம் இட ஒதுக்கீடு, தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த, அவர்களுக்கு உகந்த பணியிடங்களை கண்டறிய, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளை கண்டறிய, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், உலக வங்கி நிதியுடன், 1,763.19 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட உள்ளது.

அடுத்த ஆறு ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சி மற்றும் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தலைமை செயலர் இறையன்பு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஆனந்தகுமார், கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ், எம்.எல்.ஏ., வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X