ரேஷனில் போலி 'பில்' ஊழியர் மீது நடவடிக்கை

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:ரேஷன் கடைகளில் போலி, 'பில்' போடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும், உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. விற்பனை விபரம், கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில் பதிவு செய்யப்படுகிறது.பதிவு செய்த உடன் விற்பனை விபரம்,

சென்னை:ரேஷன் கடைகளில் போலி, 'பில்' போடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும், உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. விற்பனை விபரம், கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில் பதிவு செய்யப்படுகிறது.

பதிவு செய்த உடன் விற்பனை விபரம், கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. சிலர், வாங்காத பொருட்களை வழங்கியது போல் பதிவு செய்து முறைகேடு செய்கின்றனர்.

இது குறித்து, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கை:

கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்காமல், வழங்கியதாக எஸ்.எம்.எஸ்., வருவதாக, இணையதளத்தில் புகார்கள் வருகின்றன.

இதுபோன்ற, எஸ்.எம்.எஸ்., பெறப்பட்டதாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட ரேஷன் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

புகார்களில் குறிப்பிட்ட முறைகேடு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். முறைகேடுகளை கண்காணிக்க தவறும் ஆய்வு அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X