'வாரிசு' பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்!

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:உரிய அனுமதியின்றி, படப்பிடிப்பில் யானையை பயன்படுத்திய விவகாரத்தில், விஜய் நடித்து வரும் வாரிசு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு, இந்திய விலங்குகள் நல வாரியம், நோட்டீஸ் அனுப்பி உள்ளது.வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய் நடிக்கும், வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

சென்னை:உரிய அனுமதியின்றி, படப்பிடிப்பில் யானையை பயன்படுத்திய விவகாரத்தில், விஜய் நடித்து வரும் வாரிசு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு, இந்திய விலங்குகள் நல வாரியம், நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய் நடிக்கும், வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பில், ஐந்து யானைகளை, வனத்துறையின் உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும், விஜய் தரப்பு ஆட்கள் தாக்கியதாக வழக்கும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், புகாரின் அடிப்படையில், 'வனத்துறை அனுமதியின்றி யானையை பயன்படுத்தியது குறித்து, உரிய விளக்கத்தை ஏழு நாட்களுக்குள் தர வேண்டும்; தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, பட தயாரிப்பு நிறுவனத்திற்கு, இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதனால் வாரிசு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்கு சிக்கல் உருவாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X