தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:தாம்பரம் - கேரளா மாநிலம், எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக, சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென பயணியர் விடுத்த கோரிக்கையை, தெற்கு ரயில்வே ஏற்றுள்ளது. இந்த வழித்தடம் வழியாக, தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.எர்ணாகுளத்தில் இருந்து, நவ., 28, டிச., 5, 12, 19, 26;

சென்னை:தாம்பரம் - கேரளா மாநிலம், எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக, சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென பயணியர் விடுத்த கோரிக்கையை, தெற்கு ரயில்வே ஏற்றுள்ளது.

இந்த வழித்தடம் வழியாக, தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

எர்ணாகுளத்தில் இருந்து, நவ., 28, டிச., 5, 12, 19, 26; அடுத்த ஆண்டு ஜன., 2 மதியம், 1:10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் நண்பகல், 12:00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்

தாம்பரத்தில் இருந்து நவ., 29, டிச., 6, 13, 20, 27; அடுத்த ஆண்டு ஜன., 3 மாலை, 3:40 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் நண்பகல், 12:00 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.


காச்சிகுடா - கொல்லம்



தெலுங்கானா மாநிலம், காச்சிகுடாவில் இருந்து, தமிழகம் வழியாக, கேரளா மாநிலம், கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

காச்சிகுடாவில் இருந்து டிச.,5, 12, 19, 26; வரும் ஜன., 2, 9 மாலை, 3:50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் இரவு, 11:50 மணிக்கு கொல்லம் சென்றடையும்

கொல்லத்தில் இருந்து, டிச.,7, 14, 21, 28; வரும் ஜன., 4, 11 அதிகாலை, 2:30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 10:00 மணிக்கு காச்சிகுடா சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கி விட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X