நடிகர் கமல் அட்மிட் விரைவில் டிஸ்சார்ஜ்!| Dinamalar

நடிகர் கமல் 'அட்மிட்' விரைவில் 'டிஸ்சார்ஜ்!'

Added : நவ 24, 2022 | |
சென்னை:காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல், 68, இந்தியன் - 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கட்சி பணிகளிலும், தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில், தெலுங்கானா மாநிலம்,

சென்னை:காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல், 68, இந்தியன் - 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கட்சி பணிகளிலும், தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் சென்ற அவர், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.

நேற்று முன்தினம் மாலை, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சுதாகர் சிங் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'லேசான காய்ச்சல், இருமல், சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையால் அவர் குணமடைந்து வருகிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார்' என, தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X