சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

உலக சாம்பியனாக வேண்டும் என்பதே என் லட்சியம்!

Added : நவ 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லியில் நடைபெற்ற, 'ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப்' போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கும் பிரக்ஞானந்தா: மூன்று வயதில் இருந்து விளையாடி வருகிறேன். சின்ன வயதில் எல்லாரும் டாக்டர் ஆகணும்; சயின்டிஸ்ட் ஆகணும்னு சொல்வாங்க. நான் செஸ்சை தாண்டி, எதையும் யோசித்தது கிடையாது. பல போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், எங்கப்பா நான்
சொல்கிறார்கள்

புதுடில்லியில் நடைபெற்ற, 'ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப்' போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கும் பிரக்ஞானந்தா: மூன்று வயதில் இருந்து விளையாடி வருகிறேன். சின்ன வயதில் எல்லாரும் டாக்டர் ஆகணும்; சயின்டிஸ்ட் ஆகணும்னு சொல்வாங்க. நான் செஸ்சை தாண்டி, எதையும் யோசித்தது கிடையாது.

பல போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், எங்கப்பா நான் விளையாடின ஒரு போட்டியையும் நேரில் பார்த்தது கிடையாது.

உடல்நலமில்லாத அவரால் சரியாக நடக்க முடியாது. நான் ஜெயித்ததும் போன் செய்து சொல்வேன்; அதைக் கேட்டு அவ்வளவு சந்தோஷப்படுவார்.

சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில், அப்பா நேரில் வந்து, என் ஆட்டத்தை பார்த்தது, எல்லையில்லாத மகிழ்ச்சியாக இருந்தது.

எங்கம்மா இல்லைன்னா, நானும், அக்காவும் இந்த அளவுக்கு வந்திருக்கவே முடியாது. அப்பாவால எங்கேயும் வரமுடியாது. வீடு சென்னை - பாடியில் இருக்கு. 'கோச்சிங் சென்டர்' தி.நகரில் இருக்கு.

தினமும் ஷேர் ஆட்டோ, பஸ்சில் கூட்டிக்கிட்டு வந்து விடுறது அம்மா தான். வீட்டையும் பார்த்துக்க வேண்டும்; எங்களையும் பார்த்துக்க வேண்டும். அவங்களுக்கு ரெண்டு வேலை.

கடந்த 2019ல் லண்டனில் நடந்த போட்டிக்கு செல்லும் போது, அவங்களுக்கு இடுப்பு வலி வந்துடுச்சு. வலியை பொருட்படுத்தாமல், எனக்காக வந்தாங்க. என்னோட 5 வயதில் இருந்து எல்லாத்துக்கும் அம்மா தான் கூட வர்றாங்க.

அக்கா வைஷாலிக்கு, ஆக்ரோஷமாக விளையாடுறது ரொம்ப பிடிக்கும். நிறைய சொல்லிக் கொடுப்பாங்க. சின்ன வயதில் இருந்தே செஸ் விளையாடுவது, போட்டிகளுக்கு செல்வது என, அதிக நேரத்தை செலவிட்டதால், படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.

ஆனாலும், பள்ளி நிர்வாகம் என்னை போட்டிகளுக்கு செல்ல முழு அனுமதி கொடுத்து ஊக்கப்படுத்துகிறது.

செஸ்சை ஒரு போட்டியாக நினைச்சு விளையாடாமல் ரசித்து விளையாடணும். அப்படி செய்தால் பதற்றமும், டென்ஷனும் இருக்காது. பயிற்சிகளுக்கு நிறைய முயற்சியை கொடுக்க வேண்டும். நிறைய போட்டிகளில் கலந்துக்கிட்டே இருக்கணும்.

அப்போது தான், 10 ஆண்டிலாவது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற முடியும்.

உலகச் சாம்பியன் ஆகணும்; தரவரிசையில் முன்னாடி வரணும்; அதுவே என் லட்சியம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvasubramanian Chelliah - nairobi,கென்யா
25-நவ-202210:44:44 IST Report Abuse
Selvasubramanian Chelliah நல்லா வருவீங்க தம்பி.வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X