திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்ததால், இரவில் கடும் குளிர் நிலவி வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை நின்ற நிலையில், பனிப்பொழிவு துவங்கியது. நேற்று அதிகாலை, பனிப்பொழிவு காரணமாக, நகர் முழுதும், பனி மூட்டம் காணப்பட்டது.
பனி மூட்டம் காரணமாக, சாலைகளில் பயணித்த வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றன.
மேலும், சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் பனி மூட்டம் காரணமாக, ரயில்களும் முகப்பு விளக்குடன், மெதுவாகச் சென்றன. காலை 8:30 மணி வரை நிலவிய பனிமூட்டம், அதன் பின் வெயில் காரணமாக, நீங்கியது.
திருவாலங்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இதனால் இருசக்கர, நான்குசக்கர வாகனத்தில் வேலை, பள்ளி, கல்லுாரிக்கு செல்பவர்கள் எதிரே வரும் வாகனங்கள், நடந்து வரும் மக்கள் தெரியாமல் வாகனத்தை இயக்க முடியாமல் அவதியடைந்தனர்.