பிரதமர் கவுரவ நிதி உதவி பெற விவசாயிகள் விபரம் அவசியம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள் கொள்முதல் செய்வதற்காக, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வங்கிக் கணக்கில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதுவரை 12 தவணை வழங்கிய நிலையில், 13வது தவணை வரும் மாதம் விடுவிக்கப்பட உள்ளது. எனவே, விவசாயிகள், தங்களின் முழு விபரங்களை,

திருவள்ளூர்:பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள் கொள்முதல் செய்வதற்காக, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வங்கிக் கணக்கில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுவரை 12 தவணை வழங்கிய நிலையில், 13வது தவணை வரும் மாதம் விடுவிக்கப்பட உள்ளது. எனவே, விவசாயிகள், தங்களின் முழு விபரங்களை, pmkisan.gov.in என்ற இணைப்பில், ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, பதிவு செய்த மொபைல் போனிற்கு வரும் 'ஓ.டி.பி.' உள்ளீடு செய்ய வேண்டும். அல்லது பொது இ - சேவை மையம் அல்லது தபால் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

தங்களின் முழு விபரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ள, பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் உடனடியாக பதிவேற்றம் செய்தால் மட்டுமே, பிரதமர் நிதி உதவி கிடைக்கும். வரும், 30ம் தேதிக்குள் இதை பதிவு செய்யுமாறு, திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X